மார்ச் 18 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு! மாணவர்கள் ஹாப்பி

மார்ச் 18 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு! மாணவர்கள் ஹாப்பி!


தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 18 வெள்ளிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளூர் விடுமுறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மிக முக்கியமாக கொண்டாடப்படும் விழாவான பங்குனி உத்திர திருவிழாவானது இந்த வருடம் மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மேலும் அன்றைய தினத்தில் பரமேஸ்வரன் பார்வதியையும், ராமன் சீதையையும், முருகன் தெய்வானையையும் ஆகிய தமிழ் மக்களின் முக்கிய தெய்வங்களுக்கு திருமணம் முடிந்ததாகவும் வரலாறு கூறி உள்ளது. இது தவிர தமிழ் கடவுளான முருகனுக்கு அவரது அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களில் தேர் திருவிழா ஆண்டுதோறும் அமோகமாக நடைபெறும். இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தி முருகனின் கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்வார்கள்.


மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், காலை ,மாலை இருவேளையும் நெல்லையப்பருக்கு லிங்க பூஜை, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை ஆகியவை நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா மார்ச் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.


அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 18 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...