தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை பள்ளிகள் திறப்பு – மார்ச் 20 இல் மேலாண்மை குழுக் கூட்டம்!
தமிழகத்தில் வரும் மார்ச் 20ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம் பெற்றோர்கள் கலந்து கொள்வதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகளில் சரியாக நேரடி வகுப்புகள் சில மாதங்கள் மட்டுமே நடந்தது. இதனால் மாணவர்களின் நேரடி கல்வி முறை அதிகம் பாதிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் கிளம்பின. மேலும் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால் பள்ளிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் பள்ளிகளை மேம்படுத்துவதில், பெற்றோர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளிலும்’ பள்ளி அளவிலான மேலாண்மைக் குழுக்களை மறுசீரமைக்க’ தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோருக்கு மார்ச் 20ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை அன்று, அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில்’ பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெற இருப்பதால், அரசுப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் உருவாக்கப்பட்ட பள்ளி நிர்வாகக் குழுக்களை மாநில அரசு சீரமைத்து வருகிறது. 20 பேர் கொண்ட குழுவிற்கு ஒரு பெற்றோர் தலைமை தாங்குவார், மேலும் ஒரு சிறப்பு குழந்தையின் பெற்றோர் துணைத் தலைவராக இருப்பார். தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றில் இது முக்கிய நிகழ்வு ஆகும். அரசுப் பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.