தமிழகம் முழுவதும் ஞாயிறன்று பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஞாயிறன்று பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வருகிற 20ம் தேதி அன்று பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்கள் மீது புகார் வருவது அதிர்ச்சியை தருகிறது: போலீஸ் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

பெற்றோர் கூட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதன்படி தற்போது அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் கடந்த ஆண்டு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.

இதுவும் உங்களுக்காக:

பள்ளிகளில் இறைவணக்கம், விளையாட்டு வகுப்புக்கான தடை நீக்கம்: ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு..?

அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே மாத இறுதிக்குள் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அறிவித்தபடி கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது.

இதுவும் உங்களுக்காக:

பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்பணியிடம் & காலிப்பணியிட விவரம் : அனைத்து பாடங்களும்

தமிழகத்தில் பொதுவாக இந்த பள்ளி மேலாண்மை குழு 2 ஆண்டுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்டாயமான முறையில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...