Daily TN Study Materials & Question Papers,Educational News

10th Tamil Guide Unit 5.2 - நீதிவெண்பா

10th Tamil Guide Unit 5.2 - நீதிவெண்பா

இயல் 5.2. நீதிவெண்பா

நீதிவெண்பா

– கா.ப.செய்குதம்பிப் பாவலர்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

பாடலின் பொருள்

    அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.

I. பலவுள் தெரிக.

1. “அருந்துணை” என்பதைப் பிரித்தால்………………….

அருமை + துணை

அரு + துணை

அருமை + இணை

அரு + இணை

விடை : அருமை + துணை

2. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை“ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

தமிழ்

அறிவியல்

கல்வி

இலக்கியம்

விடை : கல்வி

II. குறு வினா

1.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத் தொடர்களாக்குக

கற்போம்! கற்போம்!

அருளைப் பெருக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!

அறிவினைப் பெற கற்போம்!

கற்போம்! கற்போம்!

மயக்க விலக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!

உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

  நீதிவெண்பா – கூடுதல் வினாக்கள்  

I. பலவுள் தெரிக.

1. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை

  1. சதாவனம்
  2. ஆடல்
  3. பாடல்
  4. ஓவியம்

விடை : சதாவனம்

2. செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்

  1. பாளையங்கோட்டை
  2. புதூர்
  3. மாறாந்தை
  4. இடலாக்குடி

விடை : இடலாக்குடி

3. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்

  1. பாரதியார்
  2. செய்குதம்பிப் பாவலர்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : செய்குதம்பிப் பாவலர்

3. “சதாவதானி” என்று பாராட்டு பெற்றவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. செய்குதம்பிப் பாவலர்

விடை : செய்குதம்பிப் பாவலர்

 

4. “சதம்” என்பதற்கு என்ன பொருள்

  1. ஒன்று
  2. பத்து
  3. நூறு
  4. ஆயிரம்

விடை : நூறு

 

5. போற்றிக் கற்க வேண்டியது

  1. கல்வி
  2. நூல்
  3. ஒழுக்கம்
  4. பண்பு

விடை : கல்வி

 

6. கற்றவர் வழி _____________ செல்லும் என்கிறது சங்க இலக்கியம்

  1. மக்கள்
  2. அரசு
  3. விலங்கு
  4. பண்பு

விடை : அரசு

7. “தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்“ என்று கூறும் நூல்

  1. மணிமேகலை
  2. சீறாப்புராணம்
  3. குண்டலகேசி
  4. திருக்குறள்

விடை : திருக்குறள்

 

7. பூக்களை நாடிச் சென்று தேன் பருகுவது

  1. வண்டு
  2. எறும்பு
  3. பூச்சி

விடை : வண்டு

 

8.  _____________ நாடிச் சென்று அறிவு பெற வேண்டும்

  1. நூல்
  2. தீயொழுக்கம்
  3. புகழ்
  4. ஒழுக்கம்

விடை : நூல்

 

9. “கல்வியென்ற” என்பதைப் பிரித்தால்………………….

  1. கல்வி + என்ற
  2. கல்வி + யென்ற
  3. கல் + யென்ற
  4. கல் + என்ற

விடை : கல்வி + என்ற

II. சிறு வினா

1. ஏன் கல்வியைப் போற்றிக் கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?

அருளினைப் போக்கி, அறிவை சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்கு தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதனை போற்றி கற்க வேண்டும் என செய்குத்தம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்.

2. சதாவதானம் குறிப்பு வரைக

சதம் என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையும், நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தேல சதாவதானம் ஆகும்.

3. செய்குதம்பிப் பாவலர் ஏன் சதாவதான் என்று போற்றப்படுகிறார்?

செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்ப்பெற்றார்.

அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

4. செய்குதம்பிப் பாவலர் குறிப்பு வரைக

சதாவதானம் என்ற கலையில் சிறந்து விளங்கியவர்

இவர் வாழ்ந்த காலம் 1874 – 1950 ஆகும்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்

பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்

சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.

செய்குதம்பியார் 1907-ம் ஆண்டு மார்ச் 10-ம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றார். அன்று முதல் “சதாவதானி செய்குதம்பிப் பாவலர்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பலவுள் தெரிக

1.‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?

அ) எதுகை

ஆ) மோனை

இ) இயைபு

ஈ) முரண்

Answer:

ஆ) மோனை

2.‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்…………………

அ) காப்பிய இலக்கியம்

ஆ) பக்தி இலக்கியம்

இ) சங்க இலக்கியம்

ஈ) நீதி இலக்கியம்

Answer:

இ) சங்க இலக்கியம்

3.‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………

அ) சதாவதானி

ஆ) தசாவதானி

இ) மொழி ஞாயிறு

ஈ) கவிமணி

Answer:

அ) சதாவதானி

4.‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?

அ) ஒளவையார்

ஆ) கபிலர்

இ) திருவள்ளுவர்

ஈ) செய்குதம்பிப் பாவலர்

Answer:

இ) திருவள்ளுவர்

5.செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை…………………

அ) ஓவியம்

ஆ) சதாவதானம்

இ) நாட்டியம்

ஈ) சிற்பம்

Answer:

ஆ) சதாவதானம்

6.செய்குதம்பிப் பாவலரின் மாவட்டம் ………………… வட்டம்…………………

அ) கன்னியாகுமரி, இடலாக்குடி

ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி

இ) கடலூர், மஞ்சக்குப்பம்

ஈ) சென்னை , மயிலாப்பூர்

Answer:

அ) கன்னியாகுமரி, இடலாக்குடி

7.செய்குதம்பிப் பாவலர் …………………வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்.

அ) பத்து

ஆ) பதினைந்து

இ) பதினெட்டு

ஈ) இருபது

Answer:

ஆ) பதினைந்து

8.சதாவதானி என்ற பாராட்டப் பெற்றவர்…………………

அ) உமறுப்புலவர்

ஆ) பனு அகமது மரைக்காயர்

இ) செய்குதம்பிப் பாவலர்

ஈ) படிக்காத புலவர்

Answer:

இ) செய்குதம்பிப் பாவலர்

9.சதாவதானி என்பது…………………

அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது

ஆ) ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது

இ) நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது

ஈ) ஆயிரம் பேருக்கு உணவிடுவது

Answer:

அ) நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது]

10.செய்குதம்பிப்பாவலர் சதாவதானி என்று பாராட்டுப் பெற்ற இடம்…………………நாள்…………………

அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10

ஆ) சென்னை தீவுத் திடல், 1909 மார்ச் 8

இ) தஞ்சாவூர் திலகர் திடல், 1908 பிப்ரவரி 8

ஈ) திருச்சி அண்ணா மைதானம், 1906 மார்ச் 6

Answer:

அ) சென்னை விக்டோரியா அரங்கம், 1907 மார்ச் 10

11.செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………

அ) கன்னியாகுமரி

ஆ) இடலாக்குடி

இ) சென்னை

ஈ) மயிலாப்பூர்

Answer:

ஆ) இடலாக்குடி

12.‘சதம்’ என்றால் ………………… என்று பொருள்.

அ) பத்து

ஆ) நூறு

இ) ஆயிரம்

ஈ) இலட்சம்

Answer:

ஆ) நூறு

13.தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது…………………

அ) நாலடியார்

ஆ) திருக்குறள்

இ) ஏலாதி

ஈ) திரிகடுகம்

Answer:

ஆ) திருக்குறள்

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support