10th Tamil Guide Unit 6.6 - அகப்பொருள் இலக்கணம்

10th Tamil Guide Unit 6.6

இயல் 6.6. அகப்பொருள் இலக்கணம்

I. பலவுள் தெரிக.

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் …………..

முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

II. குறு வினா

1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்

நிலம்        -     

காடு              -           முல்லை

பொழுது

பெரும்பொழுது - கார்காலம்             

சிறுபொழுது – மாலை

கருப்பொருள்

உணவு வரகு, சாமை

2. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

  • உழவர்கள் வயலில் உழுதனர்.
  • நெய்தல் பூச்செடியை பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர் (அல்லது) தாழைப்பூச்செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.
  • முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே இடையகர்கள் காட்டுக்குச் சென்றனர்

 அகப்பொருள் இலக்கணம் – கூடுதல் வினாக்கள் 

1. பொருள் இலக்கணம் பற்றி எழுதுக

பொருள் என்பது ஒழுக்கமுறை. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது

2. அகத்திணை என்றால் என்ன?

அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை.

3. அன்பின் திணைகள் யாவை?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவே அன்பின் ஐந்திணைகளாகும்.

4. ஐந்திணைகளுக்கு உரியன யாவை?

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.

5. முதற்பொருள் எனப்படுவது யாது?

நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

6. ஐவகை நிலங்கள் யாவை? அதன் அமைவிடங்கள் யாவை?

குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த இடமும்

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – கடலும் கடல்சார்ந்த இடமும்

பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்.

7. பொழுது எத்தனை வகைப்படும்?

பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.

8. பெரும்பொழுதின் கூறுகள் யாவை?

ஓராண்டின் ஆறு கூறுகள்

கார்காலம் – ஆவணி, புரட்டாசி

குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை

முன்பனிக் காலம் – மார்கழி, தை

பின்பனிக் காலம் – மாசி, பங்குனி

இளவேனிற் காலம் – சித்திரை, வைகாசி

முதுவேனிற் காலம் – ஆனி, ஆடி

9. சிறுபொழுது யாவை?

(ஒரு நாளின் ஆறு கூறுகள்)

காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை

நண்பகல் – காலை 10 மணி முதல் 2 மணி வரை

எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

மாலை – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

யாமம் – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

10. ஐந்திணையும் பொழுதுகளைம் கூறுக

திணை பெரும்பொழுது சிறுபொழுது

குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்

முல்லை கார்காலம் மாலை

மருதம் ஆறு பெரும்பொழுதுகள் வைகறை

நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள் எற்பாடு

பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி  நண்பகல்

11. ஐந்திணைகளின் தெய்வங்கள் பற்றி எழுதுக

குறிஞ்சி – முருகன்

முல்லை – திருமால்

மருதம் – இந்திரன்

நெய்தல் – வருணன்

பாலை – கொற்றவை

12. ஐந்திணைகளின் மக்கள் பற்றி எழுதுக

குறிஞ்சி – வெற்பன், குறவர், குறத்தியர்

முல்லை – தோன்றல், ஆயர். ஆய்ச்சியர்

மருதம் – ஊரன், உழவர், உழத்தியர்

நெய்தல் – சேர்ப்பன், பரதன், பரத்தியர்

பாலை – எயினர், எயிற்றியர்

13. ஐந்திணைகளின் உணவு பற்றி எழுதுக

குறிஞ்சி – மலைநெல், தினை

முல்லை – வரகு, சாமை

மருதம் – செந்நெல், வெண்ணெல்

நெய்தல் – மீன், உப்புக்குப் பெற்ற பொருள்

பாலை – சூறையாடலால் வரும் பொருள்

14. ஐந்திணைகளின் விலங்கு பற்றி எழுதுக

குறிஞ்சி –  புலி, கரடி, சிங்கம்

முல்லை – முயல், மான், புலி

மருதம் – எருமை, நீர்நாய்

நெய்தல் – முதலை, சுறா

பாலை – வலியிழந்த யானை

15. ஐந்திணைகளின் பூக்களினை பற்றி எழுதுக

குறிஞ்சி – குறிஞ்சி, காந்தள்

முல்லை – முல்லை, தோன்றி

மருதம் – செங்கழுநீர், தாமரை

நெய்தல் – தாழை, நெய்தல்

பாலை – குரவம், பாதிரி

16. ஐந்திணைகளின் மரங்களினை பற்றி எழுதுக

குறிஞ்சி – அகில், வேங்கை

முல்லை – கொன்றை, காயா

மருதம் – காஞ்சி, மருதம்

நெய்தல் –  புன்னை, ஞாழல்

பாலை –  இலுப்பை, பாலை

17. ஐந்திணைகளின் பறவைகள் பற்றி எழுதுக

குறிஞ்சி – கிளி, மயில்

முல்லை – காட்டுக்கோழி, மயில்

மருதம் – நாரை, நீர்க்கோழி, அன்னம்

நெய்தல் – கடற்காகம்

பாலை – புறா, பருந்து

18. ஐந்திணைகளின் ஊர் பற்றி எழுதுக

குறிஞ்சி – சிறுகுடி

முல்லை – பாடி, சேரி

மருதம் – பேரூர், மூதூர்

நெய்தல் – பட்டினம், பாக்கம்

பாலை – குறும்பு

19. ஐந்திணைகளின் நீர் பற்றி எழுதுக

குறிஞ்சி – அருவி நீர், சுனைநீர்

முல்லை – காட்டாறு

மருதம் – மனைக்கிணறு, பொய்கை

நெய்தல் – மணற்கிணறு, உவர்க்கழி

பாலை – வற்றிய சுனை, கிணறு

மொழியை ஆள்வோம்!

I. மொழிபெயர்க்க.

Koothu

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas

தமிழாக்கம்

கூத்து

தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்குமு் ஒரு மிகச்சிறந்த கலை. இதில் கிராப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்தது தான் தெருக்கூத்துக் கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பபர். கிராமங்களில் கூத்து மிகவும் பிரபலமானது.

II. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

1. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார் (தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)

விடை : அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்

2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர் சொற்றொடராக மாற்றுக.)

விடை : இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.

3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை : ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிவர். கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

4. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக.)

விடை : கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

5. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை : ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.

III. பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக

புதிர்

உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.

விடை

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டு

தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!

பிற மொழிச் சொல் தமிழ்ச்சொல்

  1. காேல்டு – பிஸ்கெட் தங்கக்கட்டி
  2. பிஸ்கட்-    கட்டி
  3. எக்ஸ்பெரிமெண்ட் – சோதனை
  4. ஆன்சரை –      விடையை, முடிவை
  5. ஆல் தி பெஸ்ட்   –    எல்லாம் நல்லபடி முடியட்டும்.
  6. ஈக்குவலாக   –      சமமாக
  7. வெயிட் –   எடை
  8. ரிப்பிட் – மறுமுறை, மறுபடி

மொழியோடு  விளையாடு

I. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் ____________ தொடங்கியது. மழைவரும்போலிருக்கிறது.

விடை : கருக்கத்

2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ____________

விடை : சிவந்தது

3. ____________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

விடை : வெள்ளை

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ____________ புல்வெளிகளில் கதிரவனின் ____________ வெயில் பரவிக் கிடக்கிறது.

விடை : பச்சை / மஞ்சள்

5. வெயிலில் அலையாதே; உடல் ____________

விடை : கருத்துவிடும்

II. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து)

1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு

வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவைதரும் மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்

சோலைப் பூவினில் வண்டினம் தங்கும்

3. மலை முகட்டில் மேகம் தங்கும்  – அதைப்

பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்

4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்

தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது – அதில்

வரும்காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து

III. அகராதியில் காண்க.

1. தால்

தாலாட்டு

தாலு

நாக்கு

2. உழுவை

புலி

ஒருவகை மீன்

தும்பிலி

3. அகவுதல்

அழைத்தல்

ஆடல்

கூத்தாடல்

4. ஏந்தெழில்

மிக்க அழகு

மிக்க வனப்பு

5. அணிமை

சமீபம்

அருகு

நுட்பம்

நுண்மை

 நிற்க அதற்குத் தக… 

கலைச்சொல் அறிவோம்…

  1. Aesthetics – அழகியல், முருகியல்
  2. Terminology – கலைச்சொல்
  3. Artifacts -கலைப் படைப்புகள்
  4. Myth – தொன்மம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்

ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்

iii) மருதம் – 3. சிறுகுடி

iv) நெய்தல் – 4. குறும்பு

v) பாலை – 5. பாடி, சேரி

அ) 3, 4, 1, 2, 5

ஆ) 4, 3, 1, 5, 2

இ) 3, 2, 5, 1, 4

ஈ) 3, 5, 1, 2, 4

Answer:

ஈ) 3, 5, 1, 2, 4

2.பொருத்தமான விடையைக் கண்டறிக.

i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு

ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை

iii) மருதம் – 3. காட்டாறு

iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்

v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி

அ) 4, 3, 2, 5, 1

ஆ) 5, 4, 1, 2, 3

இ) 4, 3, 5, 1, 2

ஈ) 3, 4, 5, 2, 1

Answer:

அ) 4, 3, 2, 5, 1

3.பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) முல்லை – வரகு, சாமை

ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்

இ) நெய்தல் – தினை

ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்

Answer:

இ) நெய்தல் – தினை

4.முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.

அ) கார்காலம்

ஆ) குளிர்காலம்

இ) முன்பனி

ஈ) பின்பனி

Answer:

அ) கார்காலம்

5.ஐந்திணைகளுக்கு உரியன ……………

i) முதற்பொருள்

ii) கருப்பொருள்

iii) உரிப்பொருள்

அ) i – சரி

ஆ) ii – சரி

இ) மூன்றும் சரி

ஈ) iii – மட்டும் சரி

Answer:

இ) மூன்றும் சரி

6.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்

ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்

iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்

iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 4, 2, 3, 1

ஈ) 3, 4, 2, 1

Answer:

அ) 4, 3, 2, 1

7.மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) நெய்தல்

ஈ) பாலை

Answer:

ஈ) பாலை

8.பொழுது எத்தனை வகைப்படும்?

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer:

அ) இரு

9.பொருத்திக் காட்டுக.

i) கார்காலம் – 1. மாசி, பங்குனி

ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை

iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை

iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 4, 2, 3,1

ஈ) 3, 4, 2, 1

Answer:

அ) 4, 3, 2, 1

10.இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………

அ) ஆவணி, புரட்டாசி

ஆ) சித்திரை, வைகாசி

இ) ஆனி, ஆடி

ஈ) மார்கழி, தை

Answer:

ஆ) சித்திரை, வைகாசி

11.ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………

அ) கார்காலம்

ஆ) குளிர்காலம்

இ) இளவேனிற்காலம்

ஈ) முதுவேனிற்காலம்

Answer:

ஈ) முதுவேனிற்காலம்

12.பொருத்திக் காட்டுக.

i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை

iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை

அ) 4, 3, 2, 1|

ஆ) 2, 1, 3, 4

இ) 4, 3, 1, 2

ஈ) 2, 1, 4, 3

Answer:

அ) 4, 3, 2, 1

13.இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………

அ) எற்பாடு

ஆ) மாலை

இ) யாமம்

ஈ) வைகறை

Answer:

இ) யாமம்

14.வைகறைக்குரிய கால நேரம்……………

அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை

இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை

ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

Answer:

அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

15.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கார்காலம்

ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்

iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி

iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்

அ) 2, 1, 4, 3

ஆ) 4, 1, 3, 2

இ) 4, 3, 1, 2

ஈ) 2, 4, 3, 1

Answer:

அ) 2, 1, 4, 3

16.நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) நெய்தல்

ஈ) பாலை

Answer:

ஈ) பாலை

17.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. வைகறை

ii) முல்லை – 2. எற்பாடு

iii) மருதம் – 3. யாமம்

iv) நெய்தல் – 4. மாலை

அ) 3, 4, 1, 2

ஆ) 4, 3, 2, 1

இ) 1, 2, 3, 4

ஈ) 3, 2, 1, 4

Answer:

அ) 3, 4, 1, 2

18.திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கொற்றவை

ii) முல்லை – 2. வருணன்

iii) மருதம் – 3. இந்திரன்

iv) நெய்தல் – 4. திருமால்

v) பாலை – 5. முருகன்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3,1

இ) 3, 2, 4, 5, 1

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1

19.திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.

i) வெற்பன் – 1. குறிஞ்சி

ii) தோன்றல் – 2. முல்லை

iii) ஊரன் – மருதம்

iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்

v) எயினர் – 5. பாலை

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3, 1

இ) 3, 5, 4, 1, 2

ஈ) 1, 2, 3, 4, 5

Answer:

ஈ) 1, 2, 3, 4, 5

20.பொருத்திக் காட்டுக.

i) புலி – 1. பாலை

ii) மான் – 2. நெய்தல்

iii) எருமை – 3. மருதம்

iv) முதலை – 4. முல்லை

v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 3, 1

இ) 2, 1, 4, 5, 3

ஈ) 4, 2, 3, 1, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1

21.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி

ii) முல்லை – 2. தாழை

iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்

iv) நெய்தல் – 4. தோன்றி

v) பாலை – 5. காந்தள்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 1, 3

இ) 2, 3, 4, 1, 5

ஈ) 3, 1, 4, 2, 5

Answer:

அ) 5, 4, 3, 2, 1

22.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை

ii) முல்லை – 2. கொன்றை, காயா

iii) மருதம் – 3. காஞ்சி

iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்

v) பாலை – 5. இலுப்பை

அ) 1, 2, 3, 4, 5

ஆ) 2, 3, 1, 5, 4

இ) 3, 4, 2, 1, 5

ஈ) 5, 4, 3, 2, 1

Answer:

அ) 1, 2, 3, 4, 5

23.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. கடற்காகம்

ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்

iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்

iv) நெய்தல் – 4. கிளி, மயில்

v) பாலை – 5. புறா, பருந்து

அ) 4, 2, 3, 1, 5

ஆ) 5, 4, 3, 2, 1

இ) 4, 3, 1, 5, 2

ஈ) 3, 4, 2, 5, 1

Answer:

அ) 4, 2, 3, 1, 5

24.விளரி யாழ் எத்திணைக்கு உரியது?

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ) நெய்தல்

ஈ) பாலை

Answer:

இ) நெய்தல்


25.பொருத்திக் காட்டுக.

i) குறிஞ்சி – 1. துடி

ii) முல்லை – 2. மீன் கோட்பறை

iii) மருதம் – 3. மணமுழா

iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை

v) பாலை-5. தொண்டகம்

அ) 5, 4, 3, 2, 1

ஆ) 4, 5, 2, 1, 3

இ) 3, 4, 5, 2, 1

ஈ) 3, 5, 1, 2, 4

Answer:

அ) 5, 4, 3, 2, 1


26.செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே

அ) நெய்தல், பாலை

ஆ) குறிஞ்சி, முல்லை

இ) மருதம், நெய்தல்

ஈ) மருதம், பாலை

Answer:

அ) நெய்தல், பாலை


27.முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்

அ) வெண்நெல், வரகு

ஆ) மலைநெல், திணை

இ) வரகு, சாமை

ஈ) மீன், செந்நெல்

Answer:

இ) வரகு, சாமை


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...