10th Tamil Guide Unit 6.5 - பாய்ச்சல்

10th Tamil Guide Unit 6.5

இயல்  6.5 பாய்ச்சல்

1.உங்கள் தெருக்களில் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞர்களைப் போல வேடமிட்டு ஆடல் நிகழ்த்திக் காட்டுக.

Answer:

(மாணவர் செயல்பாடு)

2.மேடைக் கலைஞர்களும் பகல் வேடக் கலைஞர்களும் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் குறித்து வகுப்பறையில் விவாதிக்க.

Answer:

ஆசிரியர் :

மாணவர்களே! மேடைக் கலைஞர்களும் பகல் வேடக் கலைஞர்களும் எதிர் கொள்ளும் இடர்பாடுகள் குறித்து உங்களது கருத்து என்ன?

மாணவர் குழு – 1:

ஒப்பனைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அலங்காரப் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் சலங்கைகள் காலில் குத்துவதற்கு வாய்ப்புள்ளது. வித்தைகளைக் காட்டும் போது சில விபத்துகள் நேர வாய்ப்புள்ளது.

மாணவர் குழு – 2 :

எத்தொழில் செய்யினும் வருமான நோக்குடன் செய்யப்படுகிறது. நிகழ்கலை கலைஞர்கள் வருமானம் ஈட்டுவதையே முதன்மையாகக் கொண்டவர்கள். உழைப்பதனால் வரும் வருமானம் மகிழச்சியைக் கொடுக்கும் போது, ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஆசிரியர் :

எத்தொழில் ஆயினும் வெவ்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை நாடகத்தில் நடிகர்களாக இருக்கும் கலைஞர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் வேறு மாதிரியானவை.

கோமாளிகளாக நடிக்கும் கலைஞர்கள் பிறரின் கேலிக் கூத்துக்கு ஆளாகின்றனர். தங்களுக்குரிய சோகங்கள் எதுவாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாது மக்களை மகிழ்விக்க நினைக்கும் கலைஞர்கள் உயர்ந்தவரே.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பாய்ச்சல் என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

அ) சா. கந்தசாமியின் கதைகள்

ஆ) தக்கையின் மீது நான்கு கண்கள்

இ) சுடுமண் சிலைகள்

ஈ) தொலைந்து போனவர்கள்

Answer:

ஆ) தக்கையின் மீது நான்கு கண்கள்


2.பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர் ………….

அ) ஜெயகாந்தன்

ஆ) சா. கந்தசாமி

இ) ஜெயமோகன்

ஈ) அகிலன்

Answer:

ஆ) சா. கந்தசாமி


3.சா. கந்தசாமியின் மாவட்டம் …………………….. ஊர்……………………

அ) நாகப்பட்டினம், மயிலாடுதுறை

ஆ) தஞ்சாவூர், படைத்தலைவன்குடி

இ) திருச்சி, உறையூர்

ஈ) திருவாரூர், வலங்கைமான்

Answer:

அ) நாகப்பட்டினம், மயிலாடுதுறை


4.சா. கந்தசாமி எந்தக் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்?

அ) தொலைந்து போனவர்கள்

ஆ) சூர்ய வம்சம்

இ) சாந்தகுமாரி

ஈ) சுடுமண் சிலைகள்

Answer:

ஈ) சுடுமண் சிலைகள்


5.சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம் ……………….

அ) சாயாவனம்

ஆ) சூர்ய வம்சம்

இ) சாந்தகுமாரி

ஈ) தொலைந்து போனவர்கள்

Answer:

அ) சாயாவனம்


6.பொருத்திக் காட்டுக. (சா. கந்தசாமியின் படைப்புகள்)

i) தக்கையின் மீது நான்கு கண்கள் – 1. சாகித்திய அகாதெமி விருது

ii) விசாரணைக் கமிஷன் – 2. புதினம்

iii) சுடுமண் சிலைகள் – 3. அனைத்துலக விருது

iv) சூர்ய வம்சம் – 4. சிறுகதைத் தொகுப்பு

அ) 4, 1, 3, 2

ஆ) 4, 3, 2, 1

இ) 3, 4, 2, 1

ஈ) 2, 1, 3, 4

Answer:

அ) 4, 1, 3, 2


7.பாய்ச்சல் கதையில் இடம் பெறுபவர் …………………

அ) அனுமார்

ஆ) இராமன்

இ) வாலி

ஈ) இராவணன்

Answer:

அ) அனுமார்


8.சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல்………………

அ) சூர்யவம்சம்

ஆ) சாந்தகுமாரி

இ) சாயாவனம்

ஈ) விசாரணைக் கமிஷன்

Answer:

ஈ) விசாரணைக் கமிஷன்

நெடுவினா

1.சா. கந்தசாமியின் ‘பாய்ச்சல்’ கதையில் வரும் ‘அனுமார்’ என்ற கலைஞனின் கலைத்திறனை விளக்குக. (அல்லது) அனுமார் ஆட்டம் குறித்து பாய்ச்சல் கதையின் வாயிலாக சா. கந்தசாமி கூறுவன யாவை?

Answer:

முன்னுரை:

புதின எழுத்துகளால் தனது புகழைத் தமிழ் உலகில் முத்திரைப் பதித்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சா. கந்தசாமியின் ‘பாய்ச்சல்’ கதையில் வரும் அனுமார் கலைஞனின் கலைத்திறனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தெருமுனை:


தெருமுனையில் தினந்தோறும் எத்தனையோ கலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடுத்தர மக்களை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள அனுமார் வேடமிட்டு ஒருவன் அனைவரையும் மகிழ்விக்கிறான்.

திறமைகள்:


குரங்குபோல ஓடிவந்தான். இரண்டு கால்களையும் மாறிமாறி தலையில் அடித்து வேகமாகக் கைகளை வீசி நடந்தான். கொஞ்சம் தூரம் சென்று கடையில் இருந்த வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து அருகில் இருந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து தானும் ஒரு பழம் சாப்பிட்டான்.

பக்க வாத்தியம்:


சதங்கை மேளம், தாளம், நாதசுரம் ஒலிக்க அதற்கு ஏற்றாற்போல் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்தோடினான். நீண்ட வாலை மேலே சுழற்றி தரையில் அடித்து புழுதியைக் கிளப்பினான்.

அனுமார் ஆட்டம்:

இசைக்கேற்ப ஆடியவன் தன்னையே மறந்து கைகளை மார்போடு அணைத்துக் கொண்டான். தான் உண்மை அனுமாராக மாறியதை எண்ணி ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டே பந்தக்காலைப் பற்றிக்கொண்டு மேலே ஏறினான்.

திடீரென மேளமும் நாதசுரமும் ஒலிக்கத் தொடங்கியபோது கூட்டம் திகைத்தது. கண்மூடி கண் திறப்பதற்குள் அனுமார் கீழே குதித்தார். வாலில் பெரிய தீப்பந்தம் கண்டு கூட்டம் பின்வாங்கியது.

அனுமார் கால்களைத் தரையில் அடித்து உடம்பைக் குலுக்கினார். நெருப்பு அலைபாய்ந்தது. கைகளைத் தட்டிக் குட்டிக்கரணம் போட்டான். கூட்டம் பாய்ந்தோடியது. அனுமார் தன் கம்பீரமான தோற்றத்தோடு நின்று சிரித்தார். கூட்டமும் அமைதியானது.

அனுமார் அருகில் அழகு வரல்:

அனுமாரால் வாலை வெகு நேரமாகச் சுமக்க முடியாததால் அழகு கையில் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். வாலைத் தூக்கிக் கொண்டு அழகுவாலும் ஓட முடியவில்லை. வெட்கத்தோடு வாலைப் போட்டுவிட்டு வெளியேறினான்.

காரில் வந்தவர் ஹாரன் அடிக்க ஒருவன் காரை மறித்தான். அனுமார் எரிச்சலுற்று அவனை வாலால் பின்னுக்கு இழுத்தான். கார் முன்னே வந்து அனுமாருக்குப் பணம் கொடுக்க அனுமார் வாங்காமல் மேளக்காரனைப் பார்க்க மேளக்காரன் வாங்கி மடியில் வைத்துக் கொண்டான்.

ஆற்றங்கரை ஓரம்:

ஆட்டமில்லாமல் அனுமார் நடக்க ஆரம்பித்தபோது கூட்டம் குறைய ஆரம்பித்தது. மேளக்காரன் தவுலைக் கீழே இறக்கி வைத்தான். ஆட்டம் முடிந்தது என்று தீர்மானம் செய்து கூட்டம் முற்றிலும் கலைந்தது. அனுமார் வாயால் மூச்சுவிட்டு ஆலமரத்தில் சாய்ந்துகொண்டார்.

மேளக்காரன் பணத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தான். அனுமார் அதை வாங்கிக் கொண்டு ஆற்றங்கரையோரமுள்ள கோயில் தூணில் சாய்ந்துகொண்டு அனுமார் உட்கார்ந்தார்.

முடிவுரை:

இக்கதையில் கூட்டத்தினரை மகிழ்விக்க வந்த அனுமாரின் ஆட்டத்தைக் கண்டு மயங்கி அனுமாரைப் போலத் தானும் ஆடினான் அழகு. அனுமாரோடு ஒன்றிப் போனான். கலைக் கலைக்காகவே என்பதுபோல ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை உருவாக்க முடியும் என்பதை ‘பாய்ச்சல்’ கதையில் வரும் அனுமார் மூலம் அறியமுடிகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...