10th Tamil Unit 6.3. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
-குமரகுருபரர்
ஆடுக செங்கீரை!
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ எத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை*
-செங்கீரைப் பருவம், பா.எண்.8
பாடலின் பொருள்
திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.
உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.
I. சொல்லும் பொருளும்
- பண்டி – வயிறு
- அசும்பிய – ஒளிவீசுகிற
- முச்சி – தலையுச்சிக் காெண்டை
II. இலக்கணக் குறிப்பு
- குண்டலமும் குழைகாதும் – எண்ணும்மை
- ஆடுக – வியங்கோள் வினைமுற்று
- கட்டிய – பெயரெச்சம்
- வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்
III. பகுபத உறுப்பிலக்கணம்
பதிந்து = பதி + த் (ந்) + த் + உ
- பதி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
செங்கீரைப் பருவம்
செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தைச் செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி, ஒருகாலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
அணிகலன்கள்
- சிலம்பு, கிண்கிணி – காலில் அணிவது
- அரைநாண் – இடையில் அணிவது
- சுட்டி – நெற்றியில் அணிவது
- குண்டலம், குழை – காதில் அணிவது
- சூழி – தலையில் அணிவது
IV. சிறு வினா
1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு
கிண்கிணி:-
கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.
அரைஞான் மணி:-
இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.
சிறு வயிறு:-
பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.
நெற்றிச் சுட்டி:-
பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.
குண்டலங்கள்:-
கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.
உச்சிக் கொண்டை:-
உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.
ஆடுக:-
வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக
பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சந்தத்துடன் உள்ள பாடலில் _____________ அதிகம் இருக்கும்.
விடை : உயிர்ப்பு
2. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் _____________ .
விடை : குமரகுருபரர்
3. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் _____________ ஒன்று.
விடை : 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்
4. குமரகுருபரின் காலம் _____________ நூற்றாண்டு ஆகும்
விடை : 17-ம்
II. சிறு வினா
1. செங்கீரைப் பருவனம் குறிப்பு வரைக
செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
2. குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்களும், அணியப்படும் இடங்களையும் கூறுக.
அணிகலன்கள் அணியப்படும் இடம்
சிலம்பு காலில் அணிவது
கிணகிணி காலில் அணிவது
அரை நாண் இடையில் அணிவது
சுட்டி நெற்றியில் அணிவது
குணடலம் காதில் அணிவது
குழை காதில் அணிவது
சூழி தலையில் அணிவது
3. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் சிறு குறிப்பு வரைக
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழினை குமரகுருபரர் இயற்றினார்.
96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
இதில் இறைவனையாே, தலவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.
பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகப் பாடப்பெறும்.
4. குமரகுருபரர் சிறு குறிப்பு வரைக
குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
இவர் தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி ஆகிய மாெழிகளில் புலமை மிக்கவர்
கந்தர் கலிெவண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்,
சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
5. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – சிற்றில், சிறுபறை, சிறுதேர்
6. பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?
பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்) – கழங்கு, அம்மானை, ஊசல்
7. இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் யாவை?
இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள் – காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) குமரகுருபரர்
2.செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஒன்று
Answer:
அ) இரண்டு
3.குமரகுருபரரின் காலம்…………… ஆம் நூற்றாண்டு.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
ஆ) 17
4.குமரகுருபரர் அறிந்திராத மொழியைக் கண்டறிக.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) இந்துஸ்தானி
ஈ) மலையாளம்
Answer:
ஈ) மலையாளம்
5.குமரகுருபரர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) கந்தர் கலிவெண்பா
ஆ) நீதிநெறி விளக்கம்
இ) மதுரைக் கலம்பகம்
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
Answer:
ஈ) திருக்காவலூர்க் கலம்பகம்
6.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை முதலான நூ ல்களை இயற்றியவர்.
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) ஞானியாரடிகள்
Answer:
அ) குமரகுருபரர்
7.சிற்றிலக்கியங்களின் வகைகள்……………
அ) 16)
ஆ) 64
இ) 96
ஈ) 108
Answer:
இ) 96
8.பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பருவங்கள் ……………
அ) 8
ஆ) 10
இ) 12
ஈ) 7
Answer:
ஆ) 10
9.பொருத்திக் காட்டுக :
i) அரை நாண் – 1. தலையில் அணிவது
ii) சுட்டி – 2. காதில் அணிவது
iii) குண்டலம், குழை – 3. நெற்றியில் அணிவது
iv) சூழி – 4. இடையில் அணிவது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
10.ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) சிற்றில்
ஆ) சிறுபறை
இ) சிறுதேர்
ஈ) ஊசல்
Answer:
ஈ) ஊசல்
11.பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாத பருவத்தைக் கண்டறிக.
அ) கழங்கு
ஆ) அம்மானை
இ) ஊசல்
ஈ) சிற்றில்
Answer:
ஈ) சிற்றில்
12.பிள்ளைத்தமிழில் இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் ……………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 10
Answer:
ஆ) 7
13.பிள்ளைத் தமிழில் இருபாலருக்கும் இடையே வேறுபடும் பருவங்கள் ……………
அ) 6
ஆ) 3
இ) 7
ஈ) 5
Answer:
ஆ) 3
14.காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாகக் குழந்தை ஆடும் பருவம்
அ) காப்பு
ஆ) செங்கீரை
இ) தால்
ஈ) சப்பாணி
Answer:
ஆ) செங்கீரை
15.செங்கீரைப் பருவத்தில் குழந்தையின் தலை அசைந்தாடும் மாதம் எது?
அ) 3 – 4
ஆ) 5 – 6
இ) 7 – 8
ஈ) 9 – 10
Answer:
ஆ) 5 – 6
16.கிண்கிணி என்ற அணிகலன் அணியும் இடம் ……………
அ) காலில்
ஆ) இடையில்
இ) நெற்றியில்
ஈ) காதில்
Answer:
அ) காலில்
17.குண்டலமும், குழைகாதும், ஆடுக. இச்சொற்களுக்கான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) எண்ணும்மை, வினையெச்சம்
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
இ) முற்றும்மை, வினையெச்சம்
ஈ) உம்மைத்தொகை, வியங்கோள் வினைமுற்று
Answer:
ஆ) எண்ணும்மை, வியங்கோள் வினைமுற்று
18.‘பதிந்து’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ……………
அ) பதி + த்(ந்) + த் + உ
ஆ) பதி + த் + த் + உ
இ) பதி + த் + ந் + உ
ஈ) பதிந்து + உ
Answer:
அ) பதி+த்(ந்)+த்+உ
19.குமரகுருபரர் எவ்விறைவனைச் செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
அ) சுவாமி மலை முருகன்
ஆ) வைத்தியநாத முருகன்
இ) திருக்கழுக்குன்ற முருகன்
ஈ) திருச்செந்தூர் முருகன்
Answer:
ஆ) வைத்தியநாத முருகன்
20.“கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட” – என்ற அடிகளில்
இடம்பெற்றுள்ள இலக்கிய நயங்கள் ……………
அ) மோனை, இயைபு
ஆ) மோனை, எதுகை
இ) எதுகை, இயைபு
ஈ) இயைபு, முரண்
Answer:
அ) மோனை, இயைபு
21.‘சிறு பண்டி சரிந்தாடப்’ என்பதில் ‘பண்டி’ என்பதன் பொருள் ……………
அ) வயிறு
ஆ) பெருக்கம்
இ) தலை
ஈ) சுருக்கம்
Answer:
அ) வயிறு
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.