எண்ணும் எழுத்தும் அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) வழிகாட்டு நெறிமுறைகள்

எண்ணும் எழுத்தும் அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2 மற்றும் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு BASELINE SURVEY  அந்தந்த வகுப்பு ஆசிரியர்களால் 4.7.2022 முதல் 8.7.2022 க்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது ? 

●Google Playstore க்கு சென்று " TNSED Schools " என search box ல் உள்ளீடு செய்யவும் . TNSED Schools ன் கீழ் தோன்றும் " Install " button ஐ click செய்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

TNSED Schools செயலி தங்கள் கைபேசியில் ஏற்கனவே Install செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் " Update " என தோன்றும் . " Update " button ஐ click செய்து செயலியை update செய்து கொள்ளவும்.

 ஆசிரியர்கள் தங்களுடைய EMIS Teacher ID மற்றும் password பயன்படுத்தி செயலியில் login செய்து கொள்ளவும்.

 Baseline Assessment எவ்வாறு மேற்கொள்வது ?

 செயலியில் உள்நுழைந்த பிறகு " EE " எனும் icon தோன்றும். அதை click செய்யவும். 

• அடுத்த screen ல் " Classroom Details " ஐ click செய்து , திரையில் தோன்றும் அனைத்து விவரங்களையும் ( தாங்கள் .. கையாளும் பாடம் , வகுப்பு , பயிற்று மொழி ) பூர்த்தி செய்து " Save " button ஐ click செய்யவும். Classroom details saved successfully என திரையில் தோன்றிய பிறகு . மேலே back arrow வை click செய்யவும்.

• " Baseline Assessment " ஐ click செய்தவுடன் வகுப்பு மற்றும் பாடங்கள் தோன்றும். தாங்கள் Assessment மேற்கொள்ளப்போகும் வகுப்பை click செய்யவும். 

• அடுத்த திரையில் , மாணவர்களின் பெயர் மற்றும் Assessment Status ( Assessed / Not Assessed ) காண்பிக்கப்படும்.

• திரையின் கீழ் தோன்றும் " Start Assessment " button ஐ கிளிக் செய்து மதிப்பீட்டை தொடங்கவும்.

• திரையில் தோன்றும் கேள்விகளுக்கு மாணவர்கள் வழங்கும் பதில்களை உள்ளீடு செய்து Save button ஐ click செய்யவும்.

• திரையில் காண்பிக்கப்படும் மாணவர் , absent ஆக இருக்கும் பட்சத்தில் " Skip to Next Student " click செய்து " Absent Today / Long Absent / Others " ல் சரியான option ஐ தேர்வு செய்து " Submit " button ஐ click செய்யவும்.

• இதே வழிமுறைகளை பின்பற்றி அனைத்து மாணவர்களுக்கான மதிப்பீட்டை மேற்கொள்ளவும்.

 கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ல் இதற்கான Demo Video- க்கள் வழங்கப்பட்டுள்ளன . 

https://youtu.be/bgwv9Hkslpk

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...