தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா தொற்று – பொது மக்களுக்கு ரூ.500 அபராதம்!
![]() |
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா தொற்று – பொது மக்களுக்கு ரூ.500 அபராதம்! |
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்:
தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2,743 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,062 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 403 பேரும், திருவள்ளூரில் 169பேரும், கோவையில் 127 மற்றும் காஞ்சிபுரத்தில் 94 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகங்கள் நோய்த் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் பேரில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல சென்னை மாவட்டத்திலும் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொது சுகாதார சட்டம் 1939ன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த வைரஸ் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இது அதிக வீரியத்துடன் பரவி வருகிறது அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.