தமிழகத்தில் 10 ம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய மாதாந்திர பாடத்திட்டம்
தமிழகத்தில் 10 ம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
அதாவது 2022 - 23 கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, இரண்டாம் இடைப்பருவத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு முதல் திருப்புதல் ,இரண்டாம் திருப்புதல், மூன்றாம் திருப்புதல் ஆகிய ஒவ்வொரு தேர்வுகளுக்குமான மாதாந்திர பாடத் திட்ட அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது கல்வித்துறையால். அந்த பாடத் திட்டங்களின் அடிப்படையில் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் தேர்வுகளை சிறந்த முறையில் எதிர்கொண்டு 2023 பொதுத்தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியையும் ஏற்கனவே அறிவித்துள்ளது.
பதிவிறக்கம்
மாணவர்கள் இந்த அட்டவணையை பதிவிறக்கம் செய்து தங்களுடைய பாடப் புத்தகத்தில் குறிப்பெடுத்து வைத்து அனைத்து பாடங்களையும் சிறந்த முறையில் பயிற்சி செய்து வரும் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அட்டவணையை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான அட்டவணையாக வெளியிட்டுள்ளது.
12th All subjects Syllabus 2022-2023
https://www.kalvikavi.com/2022/07/12th-all-subjects-first-mid-term.html
11th All subjects syllabus
https://www.kalvikavi.com/2022/07/11th-all-subjects-monthly-syllabus-2022.html
மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆன வினாத்தாள் அமைப்பையும் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் முயற்சி செய்யும்போது வரும் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறலாம்.நமது பாடவேளை வலைத்தளத்தின் மூலமாக மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் ஸ்டடி மெட்டீரியல் டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளோம் அதையும் டவுன்லோட் செய்து உங்களுடைய நண்பர்களுக்கும் தவறாமல் பகிர்ந்து உதவுங்கள்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.