CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதற்குரிய முழு தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு! |
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. அதாவது, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் புகட்டாத காரணத்தினால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைந்தபட்சமாக 30% மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்துடன், நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகி அனைத்து பள்ளிகளிலும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால் கல்லூரிகள் திறக்கும் நாள் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
இதனிடையே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 12 ஆம் தேதியும் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் Digilocker செயலி மற்றும் digilocker.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், cbse.gov.in மற்றும் cbresults.nic.in இந்த இணையதள பக்கத்திற்கு சென்று மாணவர்களின் பதிவு எண் மற்றும் ரோல் எண்ணை பதிவு செய்தும் மதிப்பெண்ணை அறிந்துகொள்ளலாம்.