10th Tamil Guide Unit 3.4 - கோபல்லபுரத்து மக்கள்

10th Tamil Guide Unit 3.4 - கோபல்லபுரத்து மக்கள்

 3.4 கோபல்லபுரத்து மக்கள்

1.  அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பட்டனை   கோபல்லபுரத்து மக்கள்   கதைப்பகுதி  கொண்டு விவரிக்க .

முன்னுரை : 

அன்னமய்யா  என்ற கதாபாத்திரம்  கரிசல் எழுத்தாளர் கி . ராஜநாராயணன்   என்பவரால் கோபாலபுரத்து  மக்கள்  என்ற நூலில்  எழுதப்பட்டுள்ளது . இந்நூல் 1991 ஆம்  ஆண்டிற்கான சாகித்ய அகாதமி பரிசினைப் பெற்றது .

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :

            அன்னமய்யா தற்செயலாக   அந்தப் பக்கம  வந்தபோது  அவர் கண்ணில் தென்பட்டான் அந்த வாலிபன் . அவன் கால்களை நீட்டி ,   புளியமரத்தில் சாய்ந்து  உட்கார்ந்திருந்த அவனை   நெருங்கிப் போய் பார்த்தபோது ,  பசியால் வாடி போய்விட்ட  அந்த முகத்தில்  கண்களின் தீட்சண்யம் ,  கவனிக்கக் கூடியதாய்  இருந்தது . அன்னமாய்யாவைப் பார்த்ததும்  சிறு புன்னகை காட்டினான் .  அவனைப் பார்த்ததும்  அன்னமையாவுக  பத்துக் குழந்தைகள் லாட சன்னியாசி விளையாட்டு விளையாடுவது    அன்னமையாவுக்கு  ஞாபகம் வந்தது .

நீச்சுத் தண்ணி :

              அன்னமய்யாவை பா ர்த்த வாலிபன் ”  தம்பி ,  கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா ? ”  என்று கேட்டது சந்தோஷமாக இருந்தது .” இந்தா  பக்கத்துல  அருகெடுத்துக்கிட்டு இருக்கிறவங்க கிட்ட  நீச்சுத் தண்ணி இருக்கும் ;  வாங்கிட்டு வரட்டுமா ?”  என்றார் .

                      இருவரும் மெல்ல நடந்து  வேப்பமரத்தின் அடியில் சென்றனர் .அங்கே ஏகப்பட்ட கலயங்கள் , கருப்புக் கலயங்கள்  தேங்காய்ப்பருமனுள்ள கற்களால்  மூடப்பட்டு ,  மண் தரையில்  பாதி புதைக்கப்பட்டிருந்தன. ஒரு கல்லை அகற்றினான் . ஒரு  சிரட்டையில்  காணத் துவையலும்   ஊறுகாயும் ,  மோர் மிளகாய்  போன்றவை இருந்தது .சிரட்டையே   கலயத்தின்  மூடியாக இருந்தது . ஒரு சிரட்டையில்  நீத்துபாகத்தை   வடித்து அவனிடம் திட்டினான் .

” சும்மா கடிச்சு குடிங்க  ” – ஜீவா 

கையில் வாங்கியதும்  சப்பிக்குடிப்பதா அண்ணாந்து குடிப்பதா என்ற தயக்கம்  வந்தபோது ” சும்மா கடிச்சுக் குடிங்க “என்றான் அன்னமய்யா.. உறிஞ்சும்போது  கண்கள் சொருகின . தொண்டையில்  இறங்குவதன் சொகத்தை முகம் சொல்லியது.

  ‘உட்காருங்க உட்கார்ந்து குடிங்க’ என்று உபசரித்தான் .

ரண்டாவது சிரட்டைக்கு   சோற்றின் மகுளி மேலே வந்ததும்   வார்த்துக் கொடுத்தான் .  அதைக் குடித்ததும் ‘ ஹ ! ”  என்றான் .

மடக்கும்  மடக்காய்  அவனுள் ஜீவஊற்று பொங்கி நிறைந்து வந்தது .

மனநிறைவு :

சிரட்டையைக் கையளித்துவிட்டு  அப்படியே வேப்ப மரத்து நிழலிலே சொர்க்கமாய் படுத்துத்  தூங்கினான் .அன்னமய்யாவுக்கு  மேலான மனநிறைவு ஏற்பட்டது .

மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும்  போதே   வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண் விழிக்க காத்திருந்த  அன்னமய்யா :

        வாலிபனின் சிறு தூக்கம் முடியும்வரை   காத்திருந்த அன்னமய்யா.  அந்தப் பக்கத்தில்   “அருகு “எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

  வாலிபனுக்கு முழிப்பு வந்ததும்  தன் பிரண்டு சுப்பையாவிடம்  கூட்டிச்சென்றான் . செல்லும் வழியில்

பேசிக்கொண்டே சென்றனர் .

 

”  எங்கிருந்து வர்ரீங்க . எங்க போகணும் ?”

”  ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென் ;  எங்கதெ பெரிசு ! ” என்றான் . தம்பீ ஒம் பெயரென்ன ?”

” அன்னமய்யா “

பெயருக்கேற்ற   பொருத்தம் :

“எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான “….

 

                 வாலிபன்  அந்தப் பேரை  மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக் கொண்டான் . எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது !

”  எனக்கு  இன்று நீ இடும் அன்னம் தான் “….

  பதிலுக்கு வாலிபனிடம்  என்ன என்று கேட்டான் . பெயர் பரமேஸ்வரன் எனவும் இப்போது மணின்னே  கூப்பிடு என்றான் .

” இப்போ நாம எங்க போகணும் சொல்லு ”  என்றான் . “அந்தோ…அங்கெ ” ,   என்று கைகாட்டினான் .

”  அங்கெ என்னொட பிரண்டு –  சுப்பையா ன்னு பேரு –  காலேஜ்ல படிக்கான் .   லீவுக்கு வந்திருக்கான் . அவங்க பிஞ்சையிலேயும்  அருகெடுக்கிறாங்க ,  அங்க போவமா ?  “

” ஓ !  போவமே “

   அன்னம் வழங்கிய அன்னமய்யா :

அன்னமய்யாவையும்    புதுஆளையும் பார்த்து  வரவேற்று  உண்ணும்படி உபசரித்தார்கள் . மணி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டான் .

இடதுகைச் சோற்றில்  ஒரு  சிறு பள்ளம் செய்து  அதில் துவையலை வைத்தார்கள் .  சிரிது சோற்றை எடுத்துத்  துவையலில் பட்டதோ படலையோ என்று  தொட்டு கழுக்  என்று  முழங்கினார்கள் .  அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஊர்க் கதைகள் பேச ஆரம்பித்தார்கள் . மணி திரும்பவும் படுத்து அமைதியாக கண்களை மூடிக் கிடந்தார் .

இக்கதை  அன்னமய்யாவின்   பெயருக்கும் அவரின் செயல்களுக்கும்  உள்ள பொருத்தப்பட்டனை   விளக்குகிறது .

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...