Learning Outcomes - 2 நாள் பயிற்சி செயல்பாடுகள்
ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் நடைபெறவுள்ள Learning Outcomes பயிற்சிக்கான செயல்பாடுகள்.
Daily TN Study Materials & Question Papers,Educational News
ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் நடைபெறவுள்ள Learning Outcomes பயிற்சிக்கான செயல்பாடுகள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ,ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வரும் 8 ம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கு 9 ந் தேதியும்,தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22 ந் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சியில் நடைபெற இருந்த தேர்வுகள் , மாற்று தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை நாளை தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார்
Kalvi TV - 2022 January Month Full Programme Schedule ( CUE Sheet ) for All Classes
1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஜனவரி - 2022 மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல்
03.01.2022 - 31 01.2022
Kalvi TV - January Month Full Programme Schedule - Download here
1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்!
1 ) மழலையர் காப்பகங்கள் ( Creche ) தவிர , மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ( Play Schools ) , நர்சரிப் பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதி இல்லை.
2 ) அனைத்துப் பள்ளிகளிலும் , 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
3 ) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
4 ) அரசு , தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள் , தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
5 ) பயிற்சி நிலையங்கள் ( Training and Coaching Centres ) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் பல புதிய கட்டுப்பாடுகள்...
TN GOV Press News 5.8.2022 - Download here
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வை போன்றே, திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. பொதுத் தேர்வு நடத்துவதை போன்றே, திருப்புதல் தேர்வுகளையும் நடத்த வேண்டும்.
விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து, திருத்திக் கொள்ள வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி விடைத்தாள்களை, அதே வகை பள்ளிகளுக்கே மதிப்பீட்டுக்கு வழங்க கூடாது.
மேலும், விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை, பள்ளி கல்வி துறையின், 'எமிஸ்' மேலாண்மை தளம் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வழிகள் பின்னர் அறிவிக்கப்படும். திருப்புதல் தேர்வுகளை புகார்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாகி, பொது தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தலாம் என்ற தொலைநோக்கு பார்வையுடன், இந்த தேர்வு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுவதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மீண்டும் பள்ளிகளைத் திறப்பது அல்லது திறக்கும் காலத்தை தள்ளிவைப்பது குறித்து சட்டப் பேரவையில் முடிவு செய்யப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்வித் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக கல்வித் துறைக்கு ரூ.31,500 கோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளாா். மாநிலம் முழுவதும் பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் 539 பழைய பள்ளிக் கட்டடங்களில் 501 கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 48,000 பள்ளிகள் உள்ள நிலையில், இவற்றில் பாதுகாப்பற்ற கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு 1.70 லட்சம் மையங்கள் தேவை என்ற நிலையில், தற்போது 80,000 மையங்கள் தயாராக உள்ளன. இந்தத் திட்டம் முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. தற்போது பிற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்துள்ளாா். 6 மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தை வடிவமைத்தபோதிலும், தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 அரசுப் பொதுத் தோ்வுகள் நிச்சயம் நடைபெறும். ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளைத் திறப்பது அல்லது திறக்கும் காலத்தை தள்ளிவைப்பது தொடா்பாக சட்டப் பேரவையில் முடிவு செய்யப்படும்.
பள்ளிப் பாட நூல்களில் பாலியல் விழிப்புணா்வு தொடா்பான பாடங்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வுக் கூட்டத்தில், சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக் கல்வி ஆணையா் கே.நந்தகுமாா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மக்களவை உறுப்பினா் விஷ்ணுபிரசாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ரா.லட்சுமணன், நா.புகழேந்தி, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு பாடங்களை நடத்திவிட்டு மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன. ஆனால், உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவுகிறது.
இதுதவிர தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இவற்றைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017-18-ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்தத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆக குறைத்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படியே உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
இதற்கிடையே, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிவித்தது. தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தமிழக அரசின் மீது அப்போதே பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது 10, 12-ம் வகுப்புகளைப் போல பிளஸ் 1-க்கும் 2018-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைமுறை அமலில் உள்ளது. கரோனா பரவலால் 2020-21-ம் கல்வியாண்டில் மட்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
10, 11, 12-ம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதுதவிர நீட், ஜேஇஇ உ்ளளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை.
தமிழகம் தவிர்த்து, சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை இல்லை. இதனால் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் மாறும்போது மாணவர் சேர்க்கையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வை ரத்து செய்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தை தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பரிந்துரை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இது முடிவடைந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. பின்னர் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் சுமார் 19 மாதங்களுக்கு பிறகு காலம் கடந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி அவர்களது கற்றல் திறனை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் அடிப்படையில் அரையாண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் மற்றும் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருப்புதல் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கப்பட்டு 24ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் இந்த தேர்வு அரையாண்டு தேர்வு போல் நடைபெற்றதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் வரும் ஜன.3ம் தேதி திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது தீவிரமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜன.10ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆரம்ப வகுப்புக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தொடர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் முறையில் கற்பிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிட்டு இருந்தாலும், அதிக நோய் தொற்று பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன் இறுதி மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில், அரசின் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் முதல் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு குறைந்த அவகாசம் மட்டும் தேர்வுக்கு இருப்பதால்,அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்து வகுப்புகளுக்கும் 30% முதல் 50% வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் திடீரென்று அதிக அளவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை தொற்று பரவல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது. ஆனால் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னதாக அறிவித்த படி ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.