தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இது முடிவடைந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. பின்னர் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் சுமார் 19 மாதங்களுக்கு பிறகு காலம் கடந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி அவர்களது கற்றல் திறனை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் அடிப்படையில் அரையாண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் மற்றும் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திருப்புதல் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கப்பட்டு 24ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் இந்த தேர்வு அரையாண்டு தேர்வு போல் நடைபெற்றதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் வரும் ஜன.3ம் தேதி திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது தீவிரமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜன.10ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.