தமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு?

தமிழகத்தில் ஜன.19 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு?


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் தொடக்கம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வகையாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து மீண்டும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஏனெனில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பதால் பொதுத்தேர்வுக்கு உரிய பாடங்களை நடத்த மற்றும் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.


இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமே என்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன.19ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

1 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...