இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும்.

ஆன்லைன் தேர்வு அமைச்சர் பொன்முடி பேட்டி முழு விவரம்



 பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முரையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.

இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும். 

   கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும்.

   கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

     அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி அடிப்படையில் செமஸ்டர் தேர்வு நடக்கும். 

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். 

பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும். 

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். 

பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். 

சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும். 

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை. எடுக்கப்படும்.  ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். 

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். 

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி அனைத்துக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும். 

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான முறையிலேயே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். 

எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். 

ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம். 

கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...