திருப்புதல் தேர்வு வழிமுறைகள்

 திருப்புதல் தேர்வு வழிமுறைகள்

விடைத்தாள் திருத்தும் முறை - Read More

மாணவர்களுக்கான Exam No & விடைத்தாளில் பள்ளியின் முத்திரை - Read More


மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது .முதல் அறிவிப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் திருத்த கூடாது என்று வந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் .

இரண்டாவது அறிவிப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடத்தும்போது மாணவர்களுக்கான Exam நம்பர் எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் பள்ளியின் முத்திரை விடைத்தாளில் பதிக்கப்பட்டிருக்க கூடாது என்ற அறிவிப்பு

இவை இரண்டையும் பார்க்கும்போது பள்ளியின் முத்திரையும் இல்லை மாணவர்களுக்கான தேர்வு என்னும் இதற்கு முன்பு தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற நிலையில் இன்று ஒரு நாளில் மாணவர்களுக்கான தேர்வு எண் ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கான தேர்வை நடத்தி விடைத்தாள் வேறு பள்ளியில் திருத்தம் செய்து எப்படி மாணவர்களுடைய ஒவ்வொரு மாணவனுடைய தனிப்பட்ட ஏமிஸ் நம்பரில் அப்டேட் செய்ய இயலும் என்ற சூழ்நிலை இல்லாததால் தேர்வு ஒத்தி வைக்கப் பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

இதைப் படிக்கும்போது தேர்வுக்கு சரியான முறையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தயாரான பிறகு நடத்தப்படும் என்பதனை மாணவர்கள் கருத்தில் கொண்டு நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் இந்த "விடுமுறை" படிப்பதற்காக கிடைத்த கால அவகாசம் என்பதை புரிந்து கொண்டு வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராகுமாறு நமது www.kalvikavi.com வலைதளத்தின் மூலம் மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் ஆசிரியர் என்ற முறையில்.


குறிப்பு : இது எனது தனிப்பட்ட கருத்து ஆனால் நன்கு ஆராய்ந்து கூறப்பட்ட கருத்து . தேர்வு நடத்த வேண்டும் அதையும் முறைகேட்டிற்கு இடமில்லாமல் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் கல்வித்துறை உள்ளது. மாணவர்கள் புரிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.

Post a Comment

0 Comments