TNPSC குரூப் 4 & குரூப் 2, 2 A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் திட்டம்!

TNPSC குரூப் 4 & குரூப் 2, 2 A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் திட்டம்!



தமிழகத்தில் தற்போது மின்சார வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தேவைப்படும் தகுதியான பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர்.TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 4, குரூப் 2, 2ஏ, குரூப் 1, குரூப் 3 உள்ளிட்ட பல தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வந்ததால் கடந்த ஆண்டு அனைத்து போட்டித்தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். இத்தேர்வு மூலமாக 5831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும். இத்தேர்வு மூலமாக 5255 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் மேலும் இந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் மின்சார வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம், வீட்டு வசதி வாரியம், ஆவின் உள்ளிட்ட பணியிடங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதால் குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுடன் சேர்க்கப்பட்ட உள்ளது. அதனால் குரூப் 4, குரூப் 2,2ஏ பதவிக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...