தமிழக அரசு துறையில் 12ம் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 57 ஆயிரம் சம்பளம்!முழு விவரம் இதோ!
தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் “தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் அரசு மற்றும் அரசு சாரா எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த வகையில் தற்போது அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தமிழக பொதுச் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால், பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் – Field Assistant (கள உதவியாளர்)
காலியாக உள்ள பணியிடங்கள் : 174
விண்ணப்பதாரரின் தகுதி: 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், மருத்து இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எம்எல்டி 1 ஆண்டு படிப்பை முடித்திருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பார்வை திறன் மற்றும் உடற்தகுதி சரியாக இருக்க வேண்டும்.
மாத சம்பளம் – ரூ.18,200 முதல் ரூ. 57,900 வரை.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு – தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம் மற்றும் ஓசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
தேர்வு செய்யும் முறை – நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு, ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ 600 ஆகும். மற்ற பிரிவினருக்கு ரூ 300 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி – பிப்ரவரி 2, 2022
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.