Daily TN Study Materials & Question Papers,Educational News

TNPSC Group IV தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – தேர்வாணையம் சற்றுமுன் வெளியீடு!

TNPSC Group IV தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – தேர்வாணையம் சற்றுமுன் வெளியீடு!



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC CCSE Group IV தேர்வுக்கான இறுதி கட்ட முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
TNPSC Group IV தேர்வு முடிவுகள்:

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Typist, Steno Typist, VAO, JA, FA, BC ஆகிய பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது 30.03.2022 அன்று TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வானது 24.07.2022 அன்று மதியம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வின் முடிவுகள் 24.03.2023 அன்று வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் இப்பணிகளுக்கென நடைபெற்ற TNPSC CCSE Group IV தேர்வின் இறுதி கட்ட முடிவுகளானது இன்று (06.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் TNPC Veterinary Assistant Surgeon பணிக்கென நடைபெற்ற எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் இறுதி முடிவுகளும் இன்று (06.01.2024) TNPSC-யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.


Share:

தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை; அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்”..!!

தமிழகத்தில் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்களே இல்லை; அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்”..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8,643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. இப்படி இருந்தால் அரசு பள்ளிகள் எவ்வாறு முன்னேறும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது கண்டிக்கத்தக்கது; இது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பதிலாக சீரழித்துவிடும்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1,000 ஆசிரியர் நியமிக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது கூடுதலாக 500 ஆசிரியர்களை சேர்த்து 1,500 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்க்கும் போது 500 ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால், உண்மையில் அரசு பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களில் ஒரு விழுக்காட்டினரைக் கூட நியமிக்க தமிழக அரசு தயாராக இல்லை என்பது தான் உண்மையாகும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. இந்த காலத்தில் குறைந்தது 20,000 இடைநிலை ஆசிரியர்களும், 15,000 பட்டதாரி ஆசிரியர்களும் ஓய்வு பெற்றிருப்பர். ஆனால், இந்த விவரங்களை மறைத்து விட்டு 2023 மற்றும் 24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி பார்த்தால் அந்த இடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6,553 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று 2022 திசம்பர் மாதத்தில் அரசு அறிவித்தது. ஆனால், 2023 மற்றும் ஆம் ஆண்டு முழுவதும் அந்த ஆசிரியர்கள்

தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்போது அந்த எண்ணிக்கையையும் குறைத்து 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசு பள்ளிகளை எப்படி முன்னேற்றும்?

இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமல்ல, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதிலும் இதே நிலை தான் காணப் படுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி 3,587 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக அறிவித்த தமிழக அரசு, அந்த இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டே நிரப்பப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத நிலையே உருவாகும்.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளின் காலியிடங்கள் எல்லாம் அரசுத் தரப்பில் காட்டப்படும் கணக்கு தான். உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். அவற்றுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்கள் தேவை

தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.


கல்வியிலும், மனிதவளத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டது தான் காரணம். அரசு பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை வழங்க முடியாது. எனவே, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்



Share:

4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்..!!!

4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்..!!!


சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்.

* ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

* ஜன.6, 20 மற்றும் பிப்.3, 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Share:

ஜன.10ம் தேதி ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

ஜன.10ம் தேதி ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!


தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை:


தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்  மூலம் மாதம் தோறும் ரூபாய் 1000 குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட மேல்முறையீட்டின்  மூலம் தற்போது மொத்தம் 1.15 கோடி மகளிர் உரிமை தொகையை பெற்று வருகின்றனர்.

நடப்பு மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 15ஆம் தேதி வழங்கப்படும் ரூ.1000 உரிமைத்தொகையானது வரும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நேரடியாக வங்கி கணக்கில் வரவு  வைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்துள்ளது

Share:

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் – கல்வித்துறை தகவல்!

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் – கல்வித்துறை தகவல்!


தமிழகத்தில் வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பள்ளி வேலை நாள்:

கொரோனா பெருந் தொற்று பாதிப்புகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட சமயத்தில் அதிக விடுமுறையை ஈடு செய்யும் வகையில் முன்னதாக சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் நிலைமை சீரடைந்து மாணவர்கள் கல்வி ஆண்டில் தொடக்கம் முதல் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்ட சமயத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆனது அனைத்து சனிக்கிழமைகளும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது.

இதற்காக பாதுகாப்பு கருவி பள்ளி மாணவர்களுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 4, 20, பிப்ரவரி 3 மற்றும் பிப்ரவரி 17 ஆகிய நான்கு சனிக்கிழமைகள் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்: ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி; பள்ளிக் கல்வித்துறை முடிவு..!!!

20 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கம்: ரூ.81 கோடியில் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி; பள்ளிக் கல்வித்துறை முடிவு..!!!

தமிழ்நாட்டில் 20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும், ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கவும், அத்துடன் இன்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் இயங்கி வருகின்றது. அது நடுநிலைப் பள்ளிகளில் இல்லை.இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளை பொறுத்தவரை மாணவர்கள் கரும்பலகை இல்லாமல் அகன்ற திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். 

இந்த பணிகள் அடுத்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கப்பட உள்ளன. இது தவிர, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 853 இடைநிலை ஆசிரியர்கள், 18 ஆயிரத்து 496 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 53 ஆயிரத்து 349 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கையடக்க கணினி வழங்கப்படும். இந்த கல்வியாண்டு வழங்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இணைய தள வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் ரூ.1500 கட்டணத்தில் பள்ளிகளில் இணைய தள வசதிகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அடுத்தகட்டமாக கையடக்க கணினிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.81 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.



Share:

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...!!

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

மாநில அரசு ஊழியர்கள்...

வருமான வரி செலுத்துவோர்...

பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...

சர்க்கரை அட்டைதாரர்கள்...

பொருளில்லா அட்டைதாரர்கள்...



Share:

+2 பொதுத்தேர்வு.. பயமோ.. பதற்றமோ வேண்டாம்.. மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் சொன்ன அட்வைஸ்.!!

+2 பொதுத்தேர்வு.. பயமோ.. பதற்றமோ வேண்டாம்.. மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் சொன்ன அட்வைஸ்.!!

ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பயமோ, பதற்றமோ இன்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மார்ச், ஏப்ரல் மாதம்தான் பொதுத்தேர்வு காலம் என்றாலும் செய்முறை தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் அடுத்தடுத்து ஆரம்பமாகி விடும். பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மாணவ, மாணவிகளிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.'

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பேசினார். உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். 12ஆம் வகுப்பு என்பது மிகவும் முக்கியமானது. 11ஆம் வகுப்பு வரை நீங்க என்ன படிச்சீங்க, மார்க் வாங்குனீங்க என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

+2வில் நீங்கள் எப்படி படித்து என்ன மதிப்பெண் பெற்றீர்கள் என்று காலத்திற்கும் கேட்பார்கள். இன்னும் இரண்டு மாதம்தான், மார்ச் 1, பொதுத்தேர்வு ஆரம்பித்துவிடும். ரிவிஷன் தேர்வில் இத்தனை மாதமாக நீங்கள் படித்தவைகளை ரிவைஸ் செய்ய வேண்டும். திருப்புதல் தேர்வில் உங்களுடைய முழு திறமையை காட்டுங்கள். உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் ஆசிரியர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும், ஆசிரியர்களிடம் கேளுங்கள். உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் ஆசிரியர்கள் தீர்த்து வைப்பார்கள். பயப்பட வேண்டாம்.. பதற்றப்பட வேண்டாம். உங்களுடைய பயத்தை குறைப்பதற்காகத்தான் அரையாண்டு தேர்விலேயே முழு போர்சன்களும் வைக்கப்பட்டு விட்டது. மார்ச் 1 பொதுத்தேர்வுக்கு செல்லும் உங்களுடைய முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.

நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று கல்லூரியில் சேர்வதை இலக்காக கொண்டு படியுங்கள். கல்லூரியில் சேர்ந்து படித்து அங்கு நடைபெறும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நல்ல வேலையில் சேரலாம். அதற்கான முதல் படி இந்த பிளஸ் 2தான். எனவே முழு திறமையை காட்டி பிளஸ் 2 தேர்வுகளை எழுதுங்கள் ஆல் தி பெஸ்ட் என்று கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. மார்ச் 5 ஆங்கிலம், மார்ச் 8 கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல், மார்ச் 11 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், மார்ச் 19ஆம் தேதி கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்விற்கும் போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


Share:

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு

நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ. 1,000 பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர்

உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Share:

நாசா காலண்டரில் பழநி மாணவிகளின் ஓவியம்.!!

நாசா காலண்டரில் பழநி மாணவிகளின் ஓவியம்.!!


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்ட காலண்டரில், பழநி அருகேயுள்ள  வித்யா மந்திர் பள்ளி மாணவிகளின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.

நாசா ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக, சர்வதேச அளவில் ஓவியப் போட்டிகளை நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் காலண்டரில் இடம்பெறும். 2024-ம் ஆண்டு காலண்டருக் கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 5 ஓவி யங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதில் பழநி அருகேயுள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் துகிலோவியா, லயாஷினி, தித்திகா ஆகியோரின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மாணவிகளை பள்ளி தாளாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், இயக்குநர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர். நாசா காலண்டர் ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவிகளின் ஓவியம் 5-வது முறையாக தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மும்பையில் நடந்த தேசிய ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 37 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கம் மற்றும் 1 வெள்ளிக் கேடயம் ஆகியவற்றை வென்றிருப்பதாக, பள்ளி நிர் வாகிகள் தெரிவித்தனர்


Share:

Definition List

header ads

Unordered List

Support