ஜன.10ம் தேதி ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

ஜன.10ம் தேதி ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!


தமிழகத்தில் ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை:


தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்  மூலம் மாதம் தோறும் ரூபாய் 1000 குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள்  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட மேல்முறையீட்டின்  மூலம் தற்போது மொத்தம் 1.15 கோடி மகளிர் உரிமை தொகையை பெற்று வருகின்றனர்.

நடப்பு மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 15ஆம் தேதி வழங்கப்படும் ரூ.1000 உரிமைத்தொகையானது வரும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நேரடியாக வங்கி கணக்கில் வரவு  வைக்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்துள்ளது

Post a Comment

0 Comments