5 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு – தமிழக அரசு எதிர்ப்பு!!

5 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு – தமிழக அரசு எதிர்ப்பு!!



மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை அறிமுகம் செய்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு:

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வை அறிமுகம் செய்து பல உயிர்களை காவு வாங்குவதை போல புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருகிறார்கள் என அறிவித்துள்ளார். மேலும், தொடக்க, நடுநிலைப் பள்ளி அளவில் பொதுத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. ஆனால், கல்வியை குழந்தைகள் படிக்க கூடாது என்பதற்காகவே இதுபோன்ற கல்வி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments