NEET-PG 2024 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!

NEET-PG 2024 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!



முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் 2024 ஆம் ஆண்டில் தாமதமாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்வாணைய வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET-PG 2024 தேர்வு:

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக MD , MS மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

2024 முதுகலை நீட் தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு தாமதமாகும் பட்சத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் வாயிலாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments