TNPSC குரூப் 4 பணிக்கான கல்வித்தகுதி – நீதிமன்றம் புதிய உத்தரவு!!

TNPSC குரூப் 4 பணிக்கான கல்வித்தகுதி – நீதிமன்றம் புதிய உத்தரவு!!

TNPSC குரூப் 4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித்தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 பணிகளுக்கான தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் 2020 ஆம் ஆண்டு 135 சமையல் கலைஞர்கள் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தோல்வி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அதிக கல்வித்தகுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், தன்னை பணியில் இருந்து நீக்கியாதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உத்தரவிடப்பட்டது. அது மட்டுமில்லாமல், அதிக கல்வித்தகுதி உடன் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Post a Comment

0 Comments