தமிழகத்திற்கும் ஜன.22 பொது விடுமுறை? – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!!
பொது விடுமுறை:
ஜனவரி 22ஆம் தேதி அன்று உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. 22 ஆம் தேதி அன்று சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்களுக்கு அன்றைய தினம் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திற்கும் அரை நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது
இதை தவிர உத்தரபிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மொரிசியஸ் அரசு ஊழியர்களுக்கு இதற்காக 2 மணி நேரம் அனுமதி வழங்கியுள்ளது. இதே போல், தமிழகத்திலும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்குமா என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.