டான்செட், சீட்டா தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்..!!

டான்செட், சீட்டா தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்..!!

எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்)கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 10-ம்தேதியும் நடத்தப்பட உள்ளது

இதுகுறித்து அண்ணா பல்கலை. டான்செட் பிரிவு செயலர் தரன் வெளியிட்ட அறிவிப்பு: டான்செட், சீட்டா தேர்வுகள் தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெற உள்ளன.

இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவுஜன. 10-ல் தொடங்கி பிப். 7 வரைமேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் tancet.annauniv.edu/tancet எனும் வலைதளம் வழியே விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கலாம்.

கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதுமானது. தேர்வு முடிவு மார்ச் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...