ஜனவரி 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் அதிரடி உத்தரவு.!!

ஜனவரி 21 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசின் அதிரடி உத்தரவு.!!


இந்தியாவின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவிவரும் நிலையில் ஜனவரி 21ஆம் தேதி வரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது
பள்ளிகளுக்கு விடுமுறை:

தை மாசம் துவங்கிவிட்ட நிலையிலும் தற்போது வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாகி வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசம், டெல்லி, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனி காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 5 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது பீகார் மாநிலத்தில் கடுங்குளிரின் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் எனவும், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளி இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பஞ்சாப் மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை எனவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னரும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தால் அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...