அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி – பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

 அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி – பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!




சேமியா கிச்சடி, பொங்கல், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகள் மிகவும் சுகாதாரமான முறையில் காலை உணவாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் பல அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதிலிருந்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது வரையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டு வந்து நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடரில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments