மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் – தேசிய மருத்துவ கமிஷன் தகவல்!

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் – தேசிய மருத்துவ கமிஷன் தகவல்!முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து தேசிய மருத்துவ கமிஷன் விவரங்களை வெளியிட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அனைத்தும் தேர்வுகளின் வாயிலாகவே நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை தேசிய மருத்துவ கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி முதுநிலை மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடத்தப்படும். கவுன்சிலிங் முன்பாகவே படிப்புக்கான கல்வி கட்டண விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட வேண்டும். கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தன்னிச்சையாக நடத்த முடியாது. மத்திய அல்லது மாநில கவுன்சிலிங் ஆணையம் மட்டுமே கவுன்சிலிங் நடத்தும்.

நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் பொதுவான மருத்துவ கவுன்சிலிங் மட்டுமே நடத்தப்படும். தேர்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதி பட்டியலின்படி கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. பல விடைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யும் வாய்ப்பும் மருத்துவ பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நடைமுறைகளிலும் புதிய மாற்றங்கள் செய்யப்படும். மேலும் மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கை வசதியாக  சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. படிப்பை முடித்த பின் பதிவு செய்வதற்கான மாணவர்களுக்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...