தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் – பணி தீவிரம்!!
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளின் வாயிலாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதால் கடந்த ஜன.7 ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இன்றைக்குள் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுவிடும். இதனிடையே, நாளை முதல் ஜன.14 ஆம் தேதி வரையிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நேரடியாக சென்று கைரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் கூட அவர்களின் பெயர் குறிக்கப்பட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.