தமிழக பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியாவது எப்போது??

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியாவது எப்போது??

தமிழகத்தில் குடியரசு தினத்தை ஒட்டி வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசு தினம் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வரும் நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா என மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால், கடந்த மாதம் முழுவதும் அதிகளவிலான விடுமுறை விடப்பட்டதாலும், பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்குமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments