நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!


ஜனவரி 20ஆம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

ஜனவரி மாதம் தொடங்கியது முதல் பள்ளி மாணவர்களுக்கு ஒரே குஷி ஆக இருந்து வருகிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 20 ம் தேதி சனிக்கிழமை அன்று பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு வேலை நாள் ஆகும். ஆனால் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு நாளை பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments