தமிழகத்தில் நாளை (ஜன. 30) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி ஆராதனை விழா நடைபெற இருக்கும் நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 177 வது ஆராதனை விழா கடந்த ஜனவரி 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில் முப்பதாம் தேதி வரையிலும் நடைமுறை இருக்கிறது. தியாகராஜ ஸ்வாமிகள் சித்தியடைந்த பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆராதனை விழா நடைபெற இருக்கிறது.
இந்த ஆராதனை விழாவன்று இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். மேலும், இந்த விழா ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராதனை விழாவையொட்டி ஜனவரி 30 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் அறிவித்துள்ளார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.