Daily TN Study Materials & Question Papers,Educational News

ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!




DFCCIL என்னும் Dedicated Freight Corridor Corporation of India ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (10.01.2024) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

DFCCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

GM / Dy. CPM / PM (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 55 என DFCCIL நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL / Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

Deputation விதிமுறைப்படி இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் DFCCIL நிறுவனத்தின் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Download Notification &Application link

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support