தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் புதிய மாற்றம் – கல்வித்துறை நடவடிக்கை!!

தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் புதிய மாற்றம் – கல்வித்துறை நடவடிக்கை!!



பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை தினசரி கண்காணிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கண்காணிப்பு கேமரா:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தும் நோக்கில் அரசு
ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 3500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஏற்கனவே, பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக ஹைடெக் ஆய்வகம், உயர்தர அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளி வளாகங்களில் நடைபெறும் நிகழ்வு, பள்ளி ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் செயல்பாடு ஆகியவற்றை கண்காணிக்க கேமரா பொருத்தமும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக, 2000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1646 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருக்கிறது. வரும் ஜூன் மாதத்திற்கு 2000 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் எனவும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...