பள்ளி நேரம் மாற்றம் – ஜன. 25 வரை அமல்.. கடும் குளிர் எதிரொலி!
பள்ளி நேர மாற்றம்:
இந்தியாவில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உறைய வைக்கும் அளவிற்கு குளிர் நிலவு வருகிறது. இந்த பனி மூட்டத்தால் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த கால நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் குளிர் காரணமாக பள்ளிகளில் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கல்வி துறையின் உத்தரவுப்படி மழலையர் பள்ளிகள் மற்றும் 1 – 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி வரை இந்த நேரம் மாற்றம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.