தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – ஆசிரியர்கள் பாடம் எடுக்க தடை!!

தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – ஆசிரியர்கள் பாடம் எடுக்க தடை!!

தமிழக அரசு பள்ளிகளில் பாடம் எடுக்க தன்னார்வலர்களை பயன்படுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளி:

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது வரையிலும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை படி 13000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனை சமாளிப்பதற்காக பள்ளி நிர்வாகம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர்.

மேலும், ஒரு சில பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களையும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், தமிழக அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பாடல் நடத்த வேண்டும் எனவும், தன்னார்வலர்களை பாடம் நடத்த பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...