தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் – காவல் துறை அதிரடி!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜன. 17 ஆம் தேதி காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பிற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அரசு தரப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜன. 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், ஜன. 16 ஆம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் ஜன. 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது.
காணும் பொங்கல் தினத்தில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனால் சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள். அதனால் இந்த ஆண்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்துள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.