ஜன.22 ராமர் கோவில் திறப்பு விழா – ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு!

ஜன.22 ராமர் கோவில் திறப்பு விழா – ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு!


இந்திய மக்கள் எதிர்பார்த்து இருக்கும் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அனைத்து ரயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே உத்தரவு

இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த கோவில் கட்ட 2019ம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பின் 2020ம் ஆண்டு பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இந்நிலையில் இந்த கோவில் 225 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமாகவும், கலை நயமிக்கதாக இருக்கிறது.

இந்த கோவிலின் பிரதிஷ்டை விழா வருகிற ஜன. 22ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் அன்றைய தினம் சில மாநிலங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோவில் திறப்பை ஒட்டி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மினொளியில் ஒளிர விட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments