அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் – ஜன. 24 -ல் முதல்வர் திறப்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் – ஜன. 24 -ல் முதல்வர் திறப்பு!



மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கத்தை ஜனவரி 24ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

ஜல்லிக்கட்டு அரங்கம்:

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் பெயர் திதியின் 110 கீழ் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதன்படி அலங்காநல்லூரில் இடம் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு அரங்கத்தை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் 44.6 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தை ஜனவரி 24 ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழரின் வீர விளையாட்டை ஊக்குவிக்கும்’ எக்காலத்திலும் பண்பாட்டை காப்போம் ஜனவரி 24 ஆம் தேதி அரங்கம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments