TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
2022 ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வு நடைபெற்றன. அதில் தேர்வானவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி குரூப் 2 முதன்மை தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 55,000 தேர்வர்கள் எழுதினர்
10 மாதங்களுக்கு மேலாக முடிவு எப்போது வரும் என்று தேர்வுகள் காத்திருந்த நிலையில், ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒருநாள் முன்பாகவே தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 6,151 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம். தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.