தமிழகத்தில் ஜன.10 முதல் பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஜன.10 முதல் பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பரிசுத்தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பொங்கல் பரிசு

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பொங்கல் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ,1000 ரொக்கமும் வழங்கப்பட இருக்கிறது.

அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இந்த பொங்கல் பரிசுக்கான டோக்கன் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை ஜன.10ம் தேதி முதல் துவக்க வேண்டும். தொடர்ந்து 14ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஜன 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...