1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜன. 27 வரை விடுமுறை – வெளியான முக்கிய உத்தரவு!

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜன. 27 வரை விடுமுறை – வெளியான முக்கிய உத்தரவு!



இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை


இந்தியாவில் கடந்த மாதம் முதல் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனை தொடர்ந்து குளிர் காலம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சண்டிகர் மற்றும் ஜம்மு காஸ்மீர் மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் மூடுபனி நிலவி வருகிறது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் குளிர் குறையாத நிலையில் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் படி சண்டிகர் மாநிலத்தில் ஜன. 28 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டிப்பது குறித்து கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. அதே போல ஜம்மு அரசும் குளிர் காரணமாக விடுமுறையை ஜன.27 வரை நீட்டித்துள்ளது.  அதன் படி 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 22 முதல் 27 வரை விடுமுறை எனவும் குடியரசு தின நிகழ்ச்சி ஒத்திகையில் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments