தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை – அரசு உறுதி!

 தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை – அரசு உறுதி!



தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.9000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

டாக்டர் ஊக்கத்தொகை

தமிழகத்தில் அரசு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து, சென்னையில் நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் அனைத்து முதுநிலை டாக்டர்களுக்கும், ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். மேலும், அரசாணை 293ன்படி, முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு ரூ.5000, ரூ.9000 என இரு வகைகளாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கும் ஒரே மாதியாக ரூ9,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக, டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments