தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு – பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!
போட்டித் தேர்வு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பிப்.4 ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த போட்டித்தேர்வின் மூலமாகவே பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது. இந்நிலையில், போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்காக 41,478 ஆசிரியர்கள் தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகளை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும், மே 1 ஆம் தேதி முதல் 31ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டதை போல இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்புவதற்கான காலக்கெடுவினை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.