Daily TN Study Materials & Question Papers,Educational News

DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

3 % DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!




01.07.2024 முதல் DA 3% உயர்ந்து 50% லிருந்து 53% அதிகரிக்கிறது.


இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




தீபாவளிக்குள் 3% நிலுவைத் தொகையும், இம்மாத ஊதியத்துடன் 53% DA உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.



மத்திய அரசு 3% DA உயர்வு அறிவிப்பு வெளியிட்டவுடன், தமிழக அரசும் தன் ஊழியர்களுக்கு 3% DA உயர்த்தி வழங்கும் என்று தெரிகிறது.

Share:

CCE GRADE தரநிலை - Primary & Upper Primary

CCE GRADE தரநிலை - Primary & Upper Primary



Share:

ஆசிரியர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறுதுணையாய் இருப்பேன் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

ஒருங்கிணைந்த பள்ளிக்  கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய  கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும்.




ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள். 





ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை. நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.




ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும். 


ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Share:

பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான முன் திட்டமிடல் கூட்டம்



கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான, முன் திட்டமிடல் கூட்டம் நடந்தது.


மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:



ஒவ்வொரு ஆண்டும், 6 முதல், 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.


பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்-கெடுப்பு பணி மேம்படுத்திட மொபைல் செயலியை பயன்படுத்தி, மாணவர்களின் விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு பணியை பிறத்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்தி பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியப்பட்டவுடன், பள்ளியில் சேர்க்கை மற்றும் சிறப்பு பயிற்சி செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.


இளம்வயது திருமணம், குழந்தை தொழிலாளர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், போதை அடிமையாகும் குழந்தைகள், வேறு மாநிலம் மற்றும் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்த குழந்தைகள், குடும்ப சூழலால் இடைநின்ற குழந்தைகள், பெற்றோர் இழந்த குழந்தைகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


மாவட்ட சி.இ.ஓ., (பொ) முனிராஜ், உதவி திட்ட அலுவலர் வடிவேல், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share:

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு



பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் நிரப்ப கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.





ஆனால், இந்த அரசாணைப்படி தங்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது” என நியமனங்களுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.




இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 2014-15 முதல் 2024-25 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என கோரப்பட்டது.


அதையேற்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.17-க்கு தள்ளி வைத்தார். மேலும், “ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் உரிய பதவி உயர்வு வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” எனக்கூறி பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share:

திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - CEO Proceedings



19.09.2024 முதல் 27.09.2024 வரை காலாண்டுத்தேர்வுகள் நடைபெற்றது . தேர்வுகளின் விடைத்தாட்களை திருத்தங்கள் மேற்கொண்டு 07.10.2024 அன்று மாணவர்களுக்கு விடைத்தாட்களை வழங்க தெரிவிக்கப்பட்டுருந்தது . இத்தேர்வின் விடைத்தாட்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிக்காட்டுதலின் படி சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஆய்வு குழுவினர் 09.10.2024 ( புதன்கிழமை ) மற்றும் 10.10.2024 ( வியாழக்கிழமை ) ஆகிய நாட்களில் பள்ளிகளுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.


 ஆய்வு குழுவினர் பள்ளிகளுக்கு வருகை தரும் பொழுது சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பினை அளிக்குமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share:

9th Maths Quarterly Exam Answer key 2024 | Karur,Salem,tanjavore District

9th Maths Quarterly Exam Answer key 2024 | Karur,Salem,tanjavore District

9th Maths Quarterly Exam Answer key 2024 | Karur,Salem,tanjavore District

இந்த 9th Maths Quarterly Exam Answer key 2024 | Karur,Salem,tanjavore District
டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள   Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 


Share:

10th English - Memory Poem

Unit 1 - Life

Let me but live my life from year to year,

With forward face and unreluctant soul;

Not hurrying to, nor turning from the goal;

Not mourning for the things that disappear

In the dim past, nor holding back in fear

From what the future veils; but with a whole

And happy heart, that pays its toll

To youth and Age, and travels on with cheer

So let the way wind up the hill or down,

O’er rough or smooth, the journey will be joy:

Still seeking what I sought when but a boy,

New friendship, high adventure, and a crown,

My heart will keep the courage of the quest,

And hope the road’s last turn will be the best.

- Henry Van Dyke

Unit 2 - I am Every Woman

A woman is beauty innate,

A symbol of power and strength.

She puts her life at stake,

She’s real, she’s not fake!

The summer of life she’s ready to see in spring.

She says, “Spring will come again, my dear”.

Let me care for the ones who’re near.”

She’s the woman – she has no fear!

Strong is she in her faith and beliefs.

“Persistence is the key to everything,”

Says she. Despite the sighs and groans and moans,

She’s strong on her faith, firm in her belief!

She’s lioness; don’t mess with her.

She’ll not spare you if you’re a prankster.

Don’t ever try to saw her pride, her self-respect.

She knows how to thaw you, saw you – so beware!

She’s today woman. Today’s woman, dear.

Love her, respect her, keep her near…

- Rakhi Nariani Shirke

unit 3 - The Secret of the Machines

We were taken from the ore-bed and the mine,

We were melted in the furnace and the pit

We were cast and wrought and hammered to design,

We were cut and filed and tooled and gauged to fit.

Some water, coal, and oil is all we ask,

And a thousandth of an inch to give us play:

And now, if you will set us to our task,

We will serve you four and twenty four hours a day!

We can pull and haul and push and lift and drive,

We can print and plough and weave and hear and 

light,

We can run and race and swim and fly and dive,

We can see and hear and count and read and write!

But remember, please, the Law by which we live,

We are not built to comprehend a lie,

We can neither love not pity nor forgive,

If you make a slip in handling us you die!

Though our smoke may hide the Heavens from your eyes,

It will vanish and the stars will shine again,

Because, for all our power and weight and size,

We are nothing more than children of your brain!

- Rudyard Kipling

Unit 4 - No Men are Foreign

Remember, no men are strange, no countries foreign

Beneath all uniforms, a single body breathes

Like ours: the land our brothers walk upon

Is earth like this, in which we all shall lie.

They, too, aware of sun and air and water,

Are fed by peaceful harvests, by war’s long winter starv’d.

Their hands are ours, and in their lines we read

A labour not different from our own.

Remember they have eyes like ours that wake

Or sleep, and strength that can be won

By love. In every land is common life

That all can recognise and understand.

Let us remember, whenever we are told

To hate our brothers, it is ourselves

That we shall dispossess, betray, condemn.

Remember, we who take arms against each other

It is the human earth that we defile.

Our hells of fire and dust outrage the innocence

Of air that is everywhere our own,

Remember, no men are foreign, and no countries stange.

- James Falconer Kirkup

Share:

10,11,12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் 4-10-2024 முதல் பெற்றுக் கொள்ளலாம்!

10,11,12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் 4-10-2024 முதல் பெற்றுக் கொள்ளலாம்!

நடைபெற்ற ஜூன் / ஜூலை 2024 இடைநிலை/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (மறுகூட்டல் / மறுமதிப்பீடு உட்பட), தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 04.10,2024 (வெள்ளிக்கிழமை) முதல், மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் முறை:

நிரந்தர பதிவெண் கொண்டு பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள். இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை ஜூன் / ஜூலை 2024 துணைத் தேர்வில் தேர்வெழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை:

புதிய நடைமுறையில் (மொத்தம் 600 மதிப்பெண்கள்) தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்கும் முறை

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்


.மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விலோ / இரண்டாம் ஆண்டு தேர்விலோ அல்லது இரண்டு தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Marks) வழங்கப்படும். இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் ( மொத்தம் 1200 மதிப்பெண்கள்) +2 தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, ஜூன் / ஜூலை 2024 துணைத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள். தற்போது ஜூன் / ஜூலை 2024 துணைத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.



Share:

11th 12th Std 2nd Midterm Portions | 2nd Midterm Exam 2024 Study Plan

11th 12th Std 2nd Midterm Portions | 2nd Midterm Exam 2024 Study Plan





Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories