Daily TN Study Materials & Question Papers,Educational News

12th Second (2nd ) Mid term Original Question ,Answer Key 2022 - All District

Class 12th Second (2nd ) Mid term Original Question ,Answer Key 2022 - All District

Tamil

  • 12th Tamil - Second Mid Term Original Question paper 2022 - Tirupattur Download Here

English

  • 12th English - Second Mid Term Original Question paper 2022 - Dindigul Download Here
  • 12th English - Second Mid Term Original Question paper 2022 - Madurai Download Here

Maths

  • 12th Maths - Second Mid Term Original Question paper 2022 - Chennai Download Here ( TM )
  • 12th Maths - Second Mid Term Original Question paper 2022 - Chennai Download Here ( EM )

Physics

  • 12th Physics - Second Mid Term Original Question paper 2022 - Chennai Download Here ( TM )

Economics

  • 12th Economics - Second Mid Term Original Question paper 2022 - Dindigul Download Here ( TM )
  • 12th Economics - Second Mid Term Original Question paper 2022 - Dindigul Download Here ( EM )

Commerce

  • 12th Commerce - Second Mid Term Original Question paper 2022 - Dindigul Download Here ( TM )
  • 12th Commerce - Second Mid Term Original Question paper 2022 - Dindigul Download Here ( EM )
  • 12th Commerce - Second Mid Term Original Question paper 2022 - Chennai Download Here ( EM )
  • 12th Commerce - Second Mid Term Original Question paper 2022 - Chennai Download Here ( TM )
Share:

மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் - CEO Proceeding

மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் - CEO Proceeding



மாவட்ட அளவிலான குழு பள்ளியை பார்வையிடும் போது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் வைக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

Share:

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள்

 தமிழக அரசு சத்துணவு திட்ட பிரிவில் M.S. Office தெரிந்தவர்களுக்கு கணினி இயக்குபவர்‌ பணியிடங்கள்

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் 

சிவகங்கை மாவட்டம்‌ சத்துணவு திட்ட பிரிவு - ல் கணினி இயக்குபவர்‌ பணியிடங்கள் 


சிவகங்கை மாவட்டம்‌ சத்துணவு திட்ட பிரிவு Recruitment 2022 - Apply here for கணினி இயக்குபவர்‌ Posts - 04 Vacancies - Last Date: 15.11.2022

சிவகங்கை மாவட்டம்‌ சத்துணவு திட்ட பிரிவு .லிருந்து காலியாக உள்ள கணினி இயக்குபவர்‌ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சிவகங்கை மாவட்டம்‌ சத்துணவு திட்ட பிரிவு 

பணியின் பெயர்: கணினி இயக்குபவர்‌ 

மொத்த பணியிடங்கள்: 04

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில்‌ M.S. Office அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

ஊதியம்: கணினி இயக்குபவர்‌ – ரூ.12,000/- . இப்பணியிடம்‌ பகுதி நேர அடிப்படையில்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது ஆகும்‌. இப்பணியிடம்‌ ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பதவிக்கு 01.10.2022 அன்று சூறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்‌. பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்‌ ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும்‌, ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. . இதர வகுப்பைச்சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு.

தேர்வு செயல்முறை:

கணினித்தேர்வு

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-172

என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 15-11-2022 மாலை 5.45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2022

Share:

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை!

 தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை!

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் 

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கட்டியம், உதவி சுயம்பாகம், திருமஞ்சனம், மாலைகட்டி, வயலின் (உபகோவில்), புல்லாங்குழல் (உபக்கோவில்) மற்றும் சலவையலர் பணியிடங்கள்

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் Recruitment 2022 - Apply here for கட்டியம், உதவி சுயம்பாகம், திருமஞ்சனம், மாலைகட்டி, வயலின் (உபகோவில்), புல்லாங்குழல் (உபக்கோவில்) மற்றும் சலவையலர் Posts - 10 Vacancies - Last Date: 15.11.2022

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் .லிருந்து காலியாக உள்ள கட்டியம், உதவி சுயம்பாகம், திருமஞ்சனம், மாலைகட்டி, வயலின் (உபகோவில்), புல்லாங்குழல் (உபக்கோவில்) மற்றும் சலவையலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

மொத்த பணியிடங்கள்: 10

  • கட்டியம் – 2 பணியிடங்கள்
  • உதவி சுயம்பாகம் – 2 பணியிடங்கள்
  • திருமஞ்சனம் – 1 பணியிடம்
  • மாலைகட்டி – 1 பணியிடம்
  • வயலின் (உபகோவில்) – 1 பணியிடம்
  • புல்லாங்குழல் (உபக்கோவில்) – 1 பணியிடம்
  • சலவையலர் – 2 பணியிடங்கள்

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

  • கட்டியம் – ரூ.11,600 – 36,800/-
  • உதவி சுயம்பாகம் – ரூ.10,000 – 31,500/-
  • திருமஞ்சனம் – ரூ.11,600 – 36,800/-
  • மாலைகட்டி – ரூ.10,000 – 31,500/-
  • வயலின் (உபகோவில்) – ரூ.15,700 – 50,000/-
  • புல்லாங்குழல் (உபக்கோவில்) – ரூ.15,700 – 50,000/-
  • சலவையலர் – ரூ.11,600 – 36,800/-

வயது வரம்பு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 15-11-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2022 - Download Here

Share:

பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு பதிவு செய்ய உத்தரவு

  பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு பதிவு செய்ய உத்தரவு

பத்தாம் வகுப்பு  தேர்வு எழுத உள்ள அனைத்து தனித் தேர்வர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு, வரும் 25ம் தேதிக்குள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு கல்வியாண்டு ஏப்ரலில் நடக்க உள்ள, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித் தேர்வர்கள்; முதல் முறையாக, அனைத்து பாடங்களையும் தேர்வு எழுதுவோர்; ஏற்கனவே 2012க்கு முன் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து தனித் தேர்வர்களும், நாளை முதல் 25ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகளுக்கு, 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, நடப்பு கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

செய்முறை பயிற்சி பெற்றவர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு, செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள், மைய விபரம் அறிந்து, செய்முறை தேர்வை தவறாமல் எழுதிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

வாந்தி எடுத்த ஸ்ரேயா.! தலையில் ஓங்கி ஒன்னு போட்ட சித்து.

பச்ச மீனை சாப்பிட்டு வாந்தி எடுத்த ஸ்ரேயா.! தலையில் ஓங்கி ஒன்னு போட்ட சித்து.!

கொரியன் வகை உணவகதிற்கு சென்று ஸ்ரேயா வாந்தி எடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் பேர் ஸ்ரேயாவை பின்தொடர்ந்து வருகின்றனர்.


இருவரும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் மாலத்தீவு சென்ற வீடியோ மற்றும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடியிருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இருவரும் கொரியன் உணவகம் ஒன்றுக்கு சென்று உள்ளனர். அங்கு சமைக்கப்படாத பச்சை மீனை ஸ்ரேயா உண்டார். அதை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்து விட்டார். இதை பார்த்து சித்து ஸ்ரேயா மண்டையிலே ஓங்கி ஒன்னு விட்டார். செம்ம காமெடியாக இருக்கும்.

Share:

12000க்கு செருப்பு வாங்குற அளவுக்கு பணக்காரி.! தனம் பற்றிய உண்மைகளை போட்டு உடைத்த நண்பர்கள்.!

 12000க்கு செருப்பு வாங்குற அளவுக்கு பணக்காரி.! தனம் பற்றிய உண்மைகளை போட்டு உடைத்த நண்பர்கள்.!


பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தனலெட்சுமி பற்றிய உண்மைகளை அவரது நண்பர்கள் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸில் தான் ஒரு ஏழை, அப்பா இல்லாதவர் என்று தனலெட்சுமி கூறிய அனைத்தும் பொய் என்றும், அவரது உண்மையான பெயர் தனலெட்சுமியே இல்லை என்றும் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளனர் அவரது நண்பர்கள். மேலும் தனலெட்சுமி இரண்டு படங்களை அவரே தயாரித்து இருப்பதாகவும் அவர்கள் பல உண்மைகளை கூறியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் டிக்டாக் செய்து வந்ததன் மூலமாக மிகப்பிரபலமானார். இந்த முறை பிக்பாஸில் பொதுமக்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பதால் தனலெட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பித்த நாள் முதலே சண்டை சர்ச்சரவு என இருந்து வருகிறார் தனலெட்சுமி. இரண்டாவது வாரம் நடந்த பொம்மை டாஸ்க்கில் அவர் ஷெரினாவை பிடித்து கீழே தள்ளிவிட்டார் என்று அசீம் குற்றம்சாட்டினார். ஆனால் தன் மீது தவறில்லை என்றும், குறும்படம் வேண்டும் என்றும் கேட்டு அதை நிரூபித்தும் இருந்தார். இதனால் தனலெட்சுமியின் மீது சற்று மரியாதை கூடியது. தற்போது மீண்டும் மரியாதையை கெடுத்துக் கொள்ளும் விதமாக அனைத்து ஹவுஸ்மேட்ஸிடம் தேவையில்லாமல் சண்டை போட்டும் கத்தியும் வருகிறார். இன்று நடந்த பேக்டரி டாஸ்க்கில் கூட மணியிடம் சரியான சண்டை போட்டுள்ளார் தனலெட்சுமி. இந்த வாரம் நாமிஷேனில் தனலெட்சுமி இருக்கும் நிலையில் தனலெட்சுமி பற்றி அவரது நண்பர்கள் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகத் தொடங்கியது.




தனலெட்சுமி கதை சொல்லும் டாஸ்க்கில், தனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான் என கூறியிருந்தார். மேலும் தனக்கு துணி வாங்க கூட காசில்லை. கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு துணிகளை வாங்கி வந்தேன் என்று கூறியிருந்தார். ஆனால் அது எதுவுமே உண்மை இல்லை அவர்கள் மறுத்துள்ளனர். தனலெட்சுமி என்பது அவரது உண்மையான பெயரே கிடையாது, அவர் பெயர் சுகி. இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். ஆனால் இரண்டு படங்களும் வெளிவரவில்லை. ஒரு படத்தின் புரோமஷனுக்காக விருது வழங்கும் விழாவை தனலெட்சுமி நடத்தியுள்ளார். அப்போது தொடங்கி பழக்கமானவர்கள் தான் தற்போது தனலெட்சுமி பற்றி பேட்டி கொடுத்து இருக்கும் அந்த நண்பர்கள். மேலும் அவரது தாய் துணிக்கடை நடத்தி வருவதாகவும், பைனான்ஸ் செய்து வருவதாகவும் தனலெட்சுமியின் நண்பர்கள் கூறினர்.


MLM நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி இருக்கிறார். அவரது தாயார் தான் அவளின் இரண்டு படங்களை தயாரித்தார். மேலும் தனலட்சுமி 12,000 ரூபாய்க்கு செருப்பு மட்டும் வாங்குவார். அவர் மிகப்பெரிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் பிக்பாஸ்ஸில் அவரைப் பற்றி சொன்ன அனைத்தும் பொய் என்றும் தனலெட்சுமியின் நண்பர்கள் கூறினர். தனலெட்சுமியால் எங்கள் வாழ்க்கையே நாசமாக போய்விட்டது. அவள் நண்பன் இல்லை துரோகி என அவரைப்பற்றி கடுமையாக பேசியுள்ளனர். தனலெட்சுமியின் உண்மை முகத்தை அவரது நண்பர்களே பேசியிருக்கும் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share:

மல்லிகாவை அழைத்து வந்து காதம்பரிக்கு பெரிய ஆப்பாக அடித்த சக்தி.! வேற மாறி ப்ரோமோ.!

மல்லிகாவை அழைத்து வந்து காதம்பரிக்கு பெரிய ஆப்பாக அடித்த சக்தி.! வேற மாறி ப்ரோமோ.!


மௌன ராகம் சீரியலில் மல்லிகாவை கண்டுபிடித்து அழைத்து வந்து கார்த்திக் பிறந்த நாள் விழாவில் பாட வைத்து விட்டார் சக்தி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் பலருக்கும் பிடித்த சீரியலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் திருப்பங்கள் உடனடியாக உடைத்து விடுவது பலருக்கும் பிடித்திருக்கிறது. ட்விஸ்ட் வைக்கிறேன் என்கிற பெயரில் வளவளவென்று இழுக்காமல் உடனடியாக ட்விஸ்டை உடைத்து விடுவது பலருக்கும் இந்த சீரியல் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மௌன ராகம் சீசன் ஒன் கொடுத்த வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது

இதில் முக்கிய கதாபாத்திரங்களாக வருண், தருண், சக்தி ஸ்ருதி ஆகியோர் இருக்கின்றனர். தற்போது மல்லிகாவை கடத்தி வைத்திருக்கும் இடத்தை சொர்ணம் கண்டுபிடித்து விடுகிறார். ஸ்ருதியின் டிஎன்ஏ டெஸ்ட்டை கார்த்திக்கின் அறையில் இருந்து எடுத்து அதை வைத்து காதம்பரியின் தந்தை விஸ்வநாதனை பயமுறுத்தி வருகிறார் சொர்ணம். தற்போது கதைப்படி கார்த்திக் பிறந்தநாள் கச்சேரிக்கு மல்லிகாவும் கார்த்திக்கும் ஒன்றாக பாட இருப்பதாக கிடைத்த தகவலால் மல்லிகாவை கடத்தி வைத்திருக்கிறார் காதம்பரியின் அப்பா விஸ்வநாதன். இதை தெரிந்து கொண்ட சொர்ணம் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு நீங்கள் மல்லிகா இருக்கும் இடத்தை சொல்லாவிட்டால் இதை நான் ஒரு முழுக்க பரப்பி விடுவேன் என்று கூறுகிறார்.



இதை மாடியில் இருந்து சக்தியின் கணவரின் அத்தை ஷீலா பார்த்து விடுகிறார். இந்த உண்மையை சொன்னால் நான் மல்லிகா இருக்கும் இடத்தை காட்டுகிறேன் என்று கூறி சொர்ணத்தை மல்லிகா இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார் ஷீலா. அங்கு மல்லிகாவை கண்டுபிடித்து அழைத்து வந்து கார்த்திக் பிறந்த நாள் விழாவில் பாட வைத்து விட்டார் சக்தி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது
Share:

தங்கச்சி மாதிரி பார்த்தேன்”கொதித்தெழுந்த ஏ.டி.கே..காரணம்? அந்தப் போட்டியாளர்

 கொச்சைப்படுத்துறீங்க, "தங்கச்சி மாதிரி பார்த்தேன்”கொதித்தெழுந்த ஏ.டி.கே..காரணம்? அந்தப் போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லவர் போல முகமூடி அணிந்தவர் யார் என்று பிக் பாஸ் ஜனனியிடம் கேள்வி கேட்டதற்கு ஜனனி கூறிய பதிலை கேட்டு ஏடிகே கண்கலங்கியபடி கதறி இருக்கிறார்.

நான் தங்கச்சி மாதிரி நினைத்த பொண்ணே இப்படி பேசி விட்டதே என்று ஏடிகே புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்.

ஏடிகேக்கு கிடைத்த திடீர் தாக்குதல்

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளும் விவாதங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் மேலும் நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு பிக் பாஸ் பிளான் போட்டு காயை நகர்த்தி இருக்கின்றனர். அதில் மாட்டியிருப்பவர் ஜனனி ஆனால் அவர் ஏடிகேவை கோர்த்து விட்டிருக்கிறார். எதிர்பாராத திடீர் தாக்குதலால் ஏடிகே சென்டிமென்ட் சீன் ஓடவிட்டு இருக்கிறார்.

கடைக்குட்டி ஜனனி



பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும் என்கிற கூட்டணியும், அக்கா தங்கை என்கிற கூட்டணியும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்கிற கூட்டணியும் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆறாவது சீசனில் அண்ணன் தங்கை கூட்டணி ஒர்க் அவுட் ஆகுமா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும். ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கியூட்டான சுட்டிக் குழந்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆறாவது சீசனில் அனைவரையும் விடவும் ஜனனிதான் வயது குறைந்தவர் என்பதால் எல்லோரிடமும் ஒரு குழந்தை போல சேட்டை செய்து கொண்டு துருதுருவென வலம் வருகிறார்.



 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்லவர் போல முகமூடி அணிந்தவர் யார் என்று பிக் பாஸ் ஜனனியிடம் கேள்வி கேட்டதற்கு ஜனனி கூறிய பதிலை கேட்டு ஏடிகே கண்கலங்கியபடி கதறி இருக்கிறார்.

நான் தங்கச்சி மாதிரி நினைத்த பொண்ணே இப்படி பேசி விட்டதே என்று ஏடிகே புலம்பி தள்ளி கொண்டிருக்கிறார்.

ஜனனி சொன்ன பதில்

இலங்கை பெண் ஆன ஜனனி இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளே அவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கிவிட்டனர். ஜனனிக்காக பல ஆர்மிகள் வலம் வந்து கொண்டிருக்கும்போது, இன்று பிக்பாஸ் ஜனனியிடம் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ஜனனி ஏடிகே பெயரை கூறி இருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஏடிகே இதனால் தான், இந்த வாரம் நான் வீட்டில் வெளியே சென்று விடுவேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கேனா? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

விரக்தியில் ஏடிகேவின் முடிவு

ஜனனி மற்றும் ஏடிகே இருவருக்கும் தொடர்ந்து வாக்கு வாதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் போது எஸ் கியூஸ் மீ நீங்க எப்படி என்னிடம் பேச கூடாது என்று சொல்லலாம் என்று மீண்டும் ஜனனி கேட்க ,அதற்கு ஏடிகே நான் மீண்டும் மீண்டும் வந்து உங்களிடம் தனியா கூப்பிட்டு அட்வைஸ் செய்கிறதுக்கு உங்க மேல ஒரு தனிப்பட்ட அன்பு இருக்கிறதனால் தான். இந்த பொண்ணை ஒரு தங்கச்சி மாதிரி நினைச்சேன் ஆனா அன்பை கொச்சை படுத்துட்டீங்க இந்த வீட்டில் யார் மீதும் வைக்காத பாசத்தை அந்த புள்ள மேல வைத்தேன் ஆனால் இப்படி பேசிட்டு, சீ போங்க என்கிட்ட யாரும் பேச வேண்டாம் என்று விரக்தியில் ஏடிகே பேசிய ப்ரோமோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது

Share:

சனிக்கிழமை (12.11.2022) நடைபெற இருந்த CRC தேதி மாற்றம் - Proceedings

வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற இருந்த CRC தேதி மாற்றம் - Proceedings

12.11.2022 அன்று நடைபெற கலந்தாலோசனைக் இருந்த குறுவளமைய கூட்டம் ( CRC ) நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ( 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )


CRC DATE CHANGED

2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி கால அட்டவணை . 2. மாவட்டத் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டம் நாள் . 19.07.2022 . மாநிலக் ஒருங்கிணை கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது . இதனைத் தொடர்ந்து 12.11.2022 அன்று கால அட்டவணைப்படி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த குறுவளமைய கலந்தாலோசனைக் ( CRC ) கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

Share:

Definition List

header ads

Unordered List

Support