வாந்தி எடுத்த ஸ்ரேயா.! தலையில் ஓங்கி ஒன்னு போட்ட சித்து.

பச்ச மீனை சாப்பிட்டு வாந்தி எடுத்த ஸ்ரேயா.! தலையில் ஓங்கி ஒன்னு போட்ட சித்து.!

கொரியன் வகை உணவகதிற்கு சென்று ஸ்ரேயா வாந்தி எடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் பேர் ஸ்ரேயாவை பின்தொடர்ந்து வருகின்றனர்.


இருவரும் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் மாலத்தீவு சென்ற வீடியோ மற்றும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடியிருந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இருவரும் கொரியன் உணவகம் ஒன்றுக்கு சென்று உள்ளனர். அங்கு சமைக்கப்படாத பச்சை மீனை ஸ்ரேயா உண்டார். அதை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்து விட்டார். இதை பார்த்து சித்து ஸ்ரேயா மண்டையிலே ஓங்கி ஒன்னு விட்டார். செம்ம காமெடியாக இருக்கும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post