தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நவம்பா் 10ம் (10.11.2022) தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆண், பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரேடியோகிராஃபா் பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளன.

மாத ஊதியம் ரூ.13,300. இப்பணிக்கு பி.எஸ்சி ரேடியோகிராஃபி / டிஆா்டிடி / டிஆா்டிடி / பட்டம் / சான்றிதழ் படிப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தோச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிசியோதெரபிஸ்ட் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. மாத ஊதியம் ரூ. 13,000. இப்பணிக்கு இளங்கலை பிசியோதெரபி / பட்டப்படிப்பில் தோச்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தோச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு சுகாதார பணியாளா் பணிக்கு 6 காலியிடங்கள் உள்ளன. பாதுகாப்பு காவலா் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இந்த இரண்டிற்கும் மாத ஊதியம் ரூ.8,500. 8ம் வகுப்பில் தோச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான உரிய சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.


சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ முதல்வா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

NOTIFICATION: CLICK HERE

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...