உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க P.F., ஓய்வூதியருக்கு அழைப்பு!

உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க P.F., ஓய்வூதியருக்கு அழைப்பு!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (P.F.,) மூலம், மாத ஓய்வூதியம் பெறுவோர், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஈரோடு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியதாரர் அனைவரும் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையில், 'உயிர் வாழ் சான்றிதழ்' பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர, அவர்களின் இருப்பிடத்துக்கு அருகே உள்ள தபால் அலுவலகங்கள், இ-சேவை மையங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

Aadhar FaceRD என்ற மொபைல் ஆப் மூலமும், சான்றிதழை பதிவு செய்யலாம். பதிவு செய்த நாளில் இருந்து ஓராண்டுக்கு சான்றிதழ் செல்லுபடியாகும். நவ., மாதம் வரை காத்திருக்காமல், உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்

Post a Comment

0 Comments